எம்.ஜே.எம்.சஜீத்-
அக்கரைப்பற்று ஜூனியர் வித்தியாலயத்தில் 2014, 2015, 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவர்களைப் பாராட்டி பரிசளிக்கும் நிகழ்வு (21) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் எம்.எச். அப்துல் கபூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார். அதிதிகளாக அக்கரைப்பற்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினரும், ஜூனியர் வித்தியாலய அபிவிருத்திக்குழு உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ் உட்பட பலர் எலந்துகொண்டனர்.
இதன்போது மேற்குறித்த மூன்று வருடமும் சித்தியடைந்த 32மாணவர்களும் அதிதிகளினால் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.