சீனப் பிரஜைகள் செலுத்திய காரில் மோட்டர் சைக்கிள் மோதுண்டு ஒருவர் பலி..!

க.கிஷாந்தன்-
சீன நாட்டு சுற்றுலா பிரயாணிகள் இருவர் சுற்றுலா பிரயாணமாக நுவரெலியாவிலிருந்து எல்ல நகரிற்கு வாடகை கார் ஒன்றில் சென்றுக்கொண்டிருந்த வேளையில் குறித்த கார் மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயனித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து பண்டாரவளை வெலிமடை பிரதான வீதியின் மிரஹாவத்த எனுமிடத்தில் 03.05.2017 அன்று இடம்பெற்றுள்ளது.

சீன நாட்டிலிருந்து சுற்றுலா பிரயாணிகளாக இலங்கைக்கு வருகை தந்துள்ள குறித்த இளம் ஜோடி வாடகை ரீதியில் பெற்றுக்கொண்ட மோட்டார் கார் ஒன்றில் நுவரெலியாவிலிருந்து பண்டாரவளை வழியாக எல்ல நகரிற்கு சென்றுக்கொண்டிருந்த வேளையில் பண்டாரவளை பகுதியிலிருந்து வெலிமடை நோக்கி பயனித்த மோட்டார் சைக்கிளில் மோதுண்டதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மிரஹாவத்தை தபால் நிலையத்தில் சேவையாற்றும் 54 வயதுடைய பண்டாரவளை திகனதென்ன பகுதியை சேர்ந்த லலித் சாந்த என்பவரே இவ் விபத்தில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் வெலிமடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது வாகனத்தை செலுத்திய சீன நாட்டு சுற்றுலா பிரயாணி வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன அனுமதிப்பத்திரம் காலாவதியாகி இருந்ததோடு ஓட்டுனருக்கான அனுமதிப்பத்திரமும் ஓட்டுனரிடமும் இருக்கவில்லை என பொலிஸ் ஆரம்பகட்ட விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கைதானவர்கள் வெலிமடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். விபத்து தொடர்பிலான விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -