இலங்கைத்துறை முகத்துவாரம் மக்கள் பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம்

அப்துல்சலாம் யாசீம்-
லங்கைத்துறை முகத்துவாரம்.சீனன்வௌி.உப்பூறல்.நல்லூர். நீலாக்கேணி.இழக்கந்ததை.வீரமாநகர்.பாட்டாளிபுரம்.சந்தனவெட்டை.சந்தோசபுரம்.சாலையூர்.சீதனவௌி ஆகிய கிராமங்களைச்சேர்ந்த ஆதி பழங்குடி வாசிகள் 09 அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து இன்று (28) வீரமாநகர் கிராமத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்தினர்.

பாரம்பரியமான எமது சொந்த நிலங்களை எம்மிடம் கையளியுங்கள்.எமது குடியிருப்புக்களிலிருந்து இரானுவம் அகற்றப்பட வேண்டும். எமது பாரம்பரிய தொழில்களை செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.ஈலியம்மண் பெரிய சாமி ஆலயங்களை ஆக்கிரமித்திருக்கும் பௌத்த ஆக்கிரமிப்பாளர்களை அங்கிருந்து வௌியேற்ற வேண்டும்.மாற்றி இனத்தவர் குடியேறியுள்ள பாலக்காட்டு மடு.இக்பால் நகர்.கோபாலபுரப்பட்டணம் ஆகிய கிராமங்களில் நாம் மீளக்குடியேற ஆவண செய்ய வேண்டும் அதே போல மழைமுந்தல்.நல்லூர்.உப்பூறல் ஆகிய கிராமங்களை ஆக்கிரமித்தவர்கள் அங்கிருந்து வௌியேற்றப்பட வேண்டும்.

உள்ளக்குளம் எம்மிடம் மீளக்கையளிக்கப்பட வேண்டும்.இறால் குழி.சுவாந்திர ஆறு.கொக்கட்டி ஆறு ஆகிய இடங்களில் நாம் தொழில் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் 

அத்துடன் அண்மைக்காலமாக முஸ்லிம் மக்கள் மீதான சிங்கள் பௌத்த ஆதிக்கம் நடாத்தி வரும் அடாவடித்தனங்களும்.அட்டூழியங்களும் நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து ஆயிரத்திற்கும் மேற்போராட்டத்தை நடாத்தினர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -