எம்.எம். முகம்மது காமில்-
கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் அடுத்த கட்ட நகர்வாக கல்முனைப் பிராந்தியத்தில் மங்கி வரும் கல்வித்துறையை மேன்படுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி கல்முனை முஸ்லிம் பகுதிக்கான கல்வி அபிவிருத்திக் குழுவை தாபிப்பதற்கான விசேட கலந்துரையாடல் நிகழ்வு கடந்த 29.04.2017 சனிக்கிழமை இரவு 8.30 மணியளவில் கல்முனை அல் மிஸ்பாஹ் மகாவித்தியாலயத்தில் வெகு விமர்சையாக இடம் பெற்றது.
மேற்படி விசேட கலந்துரையாடல் நிகழ்வை கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் கல்விக் குழுத் தலைவர் மௌலவி யூ.எல்.எஸ். ஹமீட் பிரதி அதிபர் அவர்கள் தலைமை ஏற்று நடத்த கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் எஸ்.அப்துஸ் சமத், செயலாளர் அல்ஹாஜ் எஸ்.எல்.எம். இப்ராஹீம் மற்றும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்ட இவ்வேளையில் மனிதவள அபிவிருத்தி அமைப்பின் விசேட அழைப்பின் பேரில் கல்முனைப் முஸ்லிம் பிராந்தியப் பாடசாலைகளின் அதிபர்கள் மற்று ஆசிரியர்கள், பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர்கள், வைத்திய காலாநிதிகள் ஏனைய அரச மற்றும் தனியார் துறை உத்தியோகத்தர்கள் போன்றோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேற்படி கலந்துரையாடல் நிகழ்வில் கல்முனை மாநகரம் தற்காலத்தில் கல்வி வளர்ச்சியில் பின் நோக்கிச் சென்று கொண்டிருப்பதற்கான பிரதான காரணிகள், மாணவர்களின் கல்வி எழுச்சிக்கான தடைகள், பாடசாலைகளில் காணப்படும் குறைபாடுகள் அதனை நிபர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் எதிர்காலத்தில் கல்முனை நகரில் கல்வி அபிவிருத்தி தொடர்பில் மேற்கொள்ளவேண்டிய ஆக்க பூர்வமான செயத்திட்டங்கள் போன்றன தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு கருத்துகள் பரிமாறப்பட்டன.
இனிவரும் காலங்களில் இவ் அமைப்பானது மிகுந்த உத்வேகத்துடன் செயற்பட்டு எதிகால சந்ததியின் கல்வி அபிவிருத்திப் பணிகளுக்கு முழு மூச்சுடன் தொழிற்படும் என்றும் கலந்து கொண்ட அக்கத்தவர்களினால் உறுதி மொழி கூறப்பட்டது.