அட்டாளைச்சேனை விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வு - சம்பியனாக சோபர்

சப்னி அஹமட் 
ட்டாளைச்சேனை பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியின் இறுதி மெய்வல்லுனர் நிகழ்வும் , பரிசளிப்பு வைபவமும் நேற்று (21) மாலை அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டதுடன், அதிகளாக முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ், அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெமீல், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இவ்விளையாட்டுப் போட்டியில் தேசிய மட்டத்திலும், மாகாண மட்டத்திலும் சாதனை படைத்த பல வீரர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிக்காட்டியதுடன், 5000,4x400 மீட்டர் போன்ற ஓட்டப்போட்டிகளுடம் அதிதிகள் முன்னிலையில் இடம்பெற்றதுடன் இறுதிப்போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தினை பெற்றுக்கொண்டது.--


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -