அப்துல்சலாம் யாசீம்-
கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்திருந்த இளைஞனுக்கு 1500/=ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (03) திருகோணமலை மேலதிக நீதவான் திருமதி சமிலா குமாரி ரத்னாயக்க உத்தரவிட்டார்.
மஹதிவுல்வெவ-புபுதுபுர பகுதியைச்சேர்ந்த பல்லேகெதர சமன்குமார (30வயது) என்ற இளைஞனுக்கே தண்டம் விதிக்கப்பட்டது.
தான் பாவித்து வந்த கையடக்க தொலைபேசியில் ஆபாச வீடியோக்களை வைத்துக்கொண்டு சக நண்பர்களுக்கு காண்பித்து வருவதாக மொறவெவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இளைஞனின் பேசியை சோதனையிட்ட போது கண்டு பிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.