அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஏற்பாட்டில் ஹதீஸ் மஜ்லிஸ்..!

எம்.ஜே.எம்.சஜீத்-
புனித ரமழான் மாதத்தினை சிறப்பிக்கும் வகையில் அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தினால் வருடாந்தம் நடாத்தப்பட்டுவரும் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வுகள் இவ்வருடமும் அட்டாளைச்சேனை பெரிய பாலத்தடியில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

அட்டாளைச்சேனை அல்-இபாதா கலாசார மன்றத்தின் ஹதீஸ் மஜ்லிஸ் பிரிவு தலைவர் மௌலவி எம்.ஐ.சப்றி (ஷர்கி) தலைமையில் நடைபெற்றுவரும் இந்நிகழ்வு தினமும் காலை 10மணி தொடக்கம் 12மணி வரை நடைபெற்று வருகிறது. 

நேற்று (30) நடைபெற்ற ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.எப்.முபாரிஸ், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி அதிபர் அஷ்ஷேஹ் ஏ.எல்.எம்.அஷ்ரப்(ஷர்கி) ஆகியோர் கலந்துகொண்டு சொற்பொழிவு நிகழ்த்தினர்.

இந்நிகழ்வில் மன்றத்தின் போசகரும், கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் தாசீம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அல்-இபாதா கலாசார மன்றம் 6வது வருடம் ஹதீஸ் மஜ்லிஸ் நிகழ்வினை நடாத்தி வருகின்றது. இந்நிகழ்வில் தலைசிறந்த உலமாக்கள் கலந்துகொண்டு சொற்பொழிவாற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -