எம்.ஜே.எம்.சஜீத்-
ஜப்பான் நாட்டு ஜெய்கா நிறுவனத்தின் அனுசரனையின் கீழ் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியின் விஷேட கல்விப் பிரிவுக்கு வளவாளர்களை தொண்டர்களாக வழங்குவது சம்மந்தமாக ஜப்பான் நாட்டின் ஜெய்கா நிறுவனத்தின் பிரதிநிதிகளுக்கும் அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரிக்கும் இடையிலான கலந்துரையாடல் கல்லூரியின் பீடாதிபதி எம்.ஐ.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்லூரியின் உபபீடாதிபதி எம்.பி.ஏ.அஸீஸ், விஷேட கல்வி பொறுப்பு விரிவுரையாளர் ஏ.ஜே.எல்.வஸீல், ஜெய்கா தொண்டர் நிகழ்சி திட்ட நிபுணர் தியாகராஜா பரமேந்திரன், அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையின் விஷேட கல்வி ஆசிரிய ஆலோசகர் எம்.ஜ ஹ்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.