ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்
கல்குடா ஓட்டாமாவடி பிரதேசத்தில் 30 வருடங்களுக்கு மேலாக பல உலமாக்களை உருவாக்கிய பெருமைக்குறிய அறபு கல்லூரியான ஓட்டமாவடி சிறாஜியா அறபு கல்லூரியானது காலத்துகேற்ற கல்வி கற்றலுக்கான இடப் பற்றாக்குறை காரணமாக ஓட்டமாவடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சூடுபத்தினசேனை, மஜ்மாநகரில் சகல வசதிகளுடனான ஏழு ஏக்கர் நிலப்பரபில் தனது சரிஆ மார்க்க கல்விக்கான காலாபீடத்தினை நிறுவிவருகின்றது.
அதனடிப்படையில் அறபு கல்லூரியின் நிருவாகத்தின் வேண்டுகோளுக்கிணங்க கல்குடா பிரதேசத்தில் சமூக ஆர்வலராக செயற்பட்டு வருபவரும், முன்னாள் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சாட்டோ வை.எல்.மன்சூரினால் 50000 ரூபாய்கள் பெறுமதி உள்ள அறுபது சீமந்து பக்கற்றுக்கள் புதிதாக நிருமாணிக்கப்படவுள்ள சரிஆ கலாபீடத்திற்கான கட்டுமான வேலைகளுக்கு இன்று 25.05.2017 கல்லூரி நிருவாகத்திடம் உத்தியோக பூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கல்லூரியின் தலைவரும் உப தாபல் அதிபருமான மெளலவி அஷ்ரஃப் (மன்பஈ), முன்னாள் கல்குடா உலமா சபை தலைவரும், தற்போதைய பிரதி தலைவரும், கல்லூரியின் அதிபருமான மெளலவி தாஹிர் ஆகியோர்கள் நிகழ்வில் கலந்து கொண்டதோடு, எதிர் நோக்கியுள்ள புனித றமழான் மாதத்தில் மிக விரைவில் குறித்த ஓட்டமாவடி சிறாஜியா அரபு கல்லூரியினால் நிருமாணிக்கப்படுகின்ற சரிஆ கலாபீடத்தினை பூர்த்தி செய்வதற்கும், அதனுடனான சுற்றுமதிலினை பூர்த்தி செய்வதற்குமாக சதக்கா, சக்காத்துக்களை வழங்கவுள்ள தனவந்தர்கள் சிறாஜியா அறபுக்கலூரிக்கும் தங்களது உதவிகளையும் பங்களிப்புக்களையும் வழங்கி இம்மையிலும், மறுமையிலும் அல்லாஹ்வின் ஈடேற்றத்தினை அடைந்துகொள்ளுமாறு கல்லூரியின் நிருவாகம் வேண்டி நிற்கின்றது.
அத்தோடு குறித்த நிகழ்வில் கல்லூரியின் நிருவாகமும், சாட்டோ மன்சூரும் புதிதாக நிருமாணிக்கப்படுகின்ற கலாபீடத்திற்கான உதவிகளை கோறி விடுக்கின்ற கருத்துகள் அடங்கிய காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியுடனான மேலதீக தொடர்புகளுக்கு-
01-ஓட்டமாவடி சிறாஜியா அறபுகல்லூரியின் தொலை பேசி இலக்கம்- 0652257308