ரிசாத்,­ஹக்கீம் ,அசாத்­சாலி, விக்னேஸ்வரன், விஜயலகாவை கைது செய்தால் ஞான­சார ஆஜர்

நாட்டில் இன­வா­தத்தைத் தூண்­டு­பவர், உர­மூட்­டு­பவர் ஞான­சார தேரர் அல்ல. அமைச்­சர்கள் ரிசாத், ரவூப்­ஹக்கீம் மற்றும் அசாத்­சாலி முத­ல­மைச்சர் விக்­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் விஜ­ய­கலா ஆகி­யோரே இன­வா­தத்தை தூண்­டு­கி­றார்கள். எனவே ஞான­சார தேரரை கைது செய்­வ­தற்கு முன்பு இவர்­களை கைது செய்­யுங்கள்.

ஞான­சார தேரர் தானா­கவே முன்­வந்து ஆஜ­ராவார் என சிங்­கள ராவ­யவின் செய­லாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார். நேற்று மதியம் ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சே­னாவின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­தா­வது புதிய சட்­டத்தின் கீழேயே ஞான­சார தேரரை கைது செய்ய முயற்­சிக்­கி­றார்கள் இன்று முஸ்­லிம்­களால் தொல்­பொ­ருட்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன.வன­பி­ர­தே­சங்கள் சைத்­தி­யாக்கள் அழிக்­கப்­ப­டு­கின்­றன. இவற்­றை­யெல்லாம் பார்க்கும் போது நாம் வேத­னையால் துன்­பத்தால் துடிக்­கிறோம்.

கண்­க­ளி­லி­ருந்து நீர் வழி­கி­றது.ஞான­சார தேரர் ஒரு குற்­ற­வாளி அல்ல.அவர் பௌத்த மதத்­துக்­கா­கவும் பௌத்த நாட்­டுக்­கா­கவும் குரல்­கொ­டுப்­பவர். அவ­ருக்கு ஏதும் ஏற்­பட நாம் விட­மாட்டோம். அவரைக் கைது செய்ய முடி­யாது. அவ்­வாறு கைது செய்தால் எம்­மையும் கைது செய்ய வேண்­டிய நிலைமை உரு­வாகும் அதற்கு மேலும் 1000 சிறைச்­சா­லைகள் அமைக்க வேண்­டி­யேற்­படும்.

எமக்கு ஆயுட்­கால சிறைத்­தண்­டனை வழங்க வேண்­டி­யேற்­படும். எமக்­குப்பின் வரு­ப­வர்­களும் சந்­த­தி­யி­னரும் ஞான­சார தேர­ருக்­காக குரல் கொடுப்­பார்கள்.இன்று பௌத்த தலங்­க­ளுக்கும் தொல்­பொருள் பிர­தே­சங்­க­ளுக்கும் வன­பி­ர­தே­சங்­க­ளுக்கும் ஏற்­பட்­டுள்ள அழி­வு­களை நாம் அனைத்­துக்­கட்சி அர­சியல் தலை­வர்­க­ளி­டமும் பட்­டி­ய­லிட்டுக் கொடுக்­க­வுள்ளோம்.

நாம் தமிழ், சிங்­கள, முஸ்லிம் அர­சியல் தலை­வர்­களைக் சந்­தித்து இம்­மு­றைப்­பா­டு­களை கைய­ளிக்­க­வுள்ளோம்.பள்­ளி­வா­சல்கள் முஸ்லிம் கடைகள் தாக்­கு­தல்கள் பற்றி எமக்கு எது­வுமே தெரி­யாது. நாம் இதில் சம்­பந்­தப்­ப­ட­வில்லை. சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்து சட்­டத்தின் முன்­நி­றுத்தும் படியே நாம் கூறு­கிறோம். எமது பிரச்­சி­னை­களை பேச்­சு­வார்த்­தைகள் மூலம் தீர்த்துக் கொள்­ளலாம்.

நல்­லி­ணக்­கத்­துக்கு நாம் தயா­ரா­கவே இருக்­கிறோம். ஆனால் சிலர் எம்மை இன­வா­தி­க­ளாக பட்டம் சூட்­டி­யி­ருக்­கி­றார்கள். சிலர் அர­சியல் பின்­ன­ணியைக் கொண்டே நாம் செயற்­ப­டு­வ­தாகக் கூறு­கி­றார்கள். பொது­பல சேனா அமைப்­புக்கு அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்­கான எந்தத் தேவை­யு­மில்லை.

ஞான­சார தேரரின் சொற்­பி­ர­யோ­கங்கள் இன­வா­தத்தை தூண்­டு­வ­தாகக் கூறு­கி­றார்கள். இதைப்­பற்­றியே விமர்­சிக்­கி­றார்கள். அவர் மீதும், தேரர்கள் மீதும் சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்­காக விசேட பொலிஸ் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறு­கி­றார்கள். இவற்­றினால் பயன் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை. நல்­லி­ணக்கம் உரு­வாகப் போவ­தில்லை.

நாட்டில் தொல்­பொருள் சட்­டத்தை கடு­மை­யாக அமுல்­ந­டத்­தும்­படி வேண்­டு­கோளும், அவ்­வாறு அமுல்­ப­டுத்­தப்­பட்டால் இந்தப் பிரச்­சி­னைகள் தானா­கவே தீர்­வுக்கு வந்து விடும். குரு­நாகல் தொர­யா­யவில் ஞான­சார தேரர் கைது செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை திட்­ட­மிட்ட செயல் எனக் கரு­து­கிறோம். அவரை கைது செய்து கடத்­து­வ­தற்கே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­துள்­ளது என சந்­தே­கிக்­கிறோம்.

கடத்திச் சென்று கொலை செய்­வ­தற்­கான முயற்சி இது.ஒனே­கம ஜல­கெ­லும்­மின்ன வன பிர­தே­சத்தில் முஸ்­லிம்கள் எமது 21 சைத்­தி­யாக்­களில் 15ஐ தரை மட்­ட­மாக்­கி­யி­ருக்­கி­றார்கள். அவ்­வி­டத்தில் மாட்டுப் பண்­ணையும், மாடு அறுக்கும் மடு­வமும் அமைத்திருந்தார்கள்.

சைத்தியா நிர்மாணத்தின் கற்களே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இதனால் எமக்கு வேதனை ஏற்படாதா? கண்ணீர் வராதா?  அமைச்சர் மனோ கணேசனை சந்தித்துப் பேசினோம். அவர் இலங்கை பௌத்த நாடு அல்ல என்கிறார். அவர்களுக்கும் சொந்தம் என்றார். அப்படியென்றால் எப்படி நல்லிணக்கம் உருவாகும். நல்லிணக்கம் உருவாக வேண்டுமென்றால் உண்மைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -