அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை அலஸ்தோட்டம் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்ட லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இன்று (06) பிற்பகல் 01 மணியளவில் முதியவரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை. இலக்கம் 96 பாடசாலை வீதியைச்சேர்ந்த கே.ராதா (62வயது) எனவும் தெரியவருகின்றது.
நிறுத்தி வைக்கப்ட்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் மோதியதாகவும் அதனையடுத்து தனியார் மருத்துவமனையில் காலை 9.30மணியளவில் அனுமதிக்கப்ட்ட நிலையில் பிற்பகல் 1.00மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பாக உப்புவௌி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.