தமிழ் தேசிய கூட்டமைப்பின் சுழற்சி முறை ஆசனம் எமது கட்சிக்கு கூட்டமைப்பு வழங்க வேண்டும்- GT லிங்கநாதன்

வுனியா கோவில்குளம் ரொக்கட் விளையாட்டுக் கழகத்தின் 41ஆவது வருடாந்த விளையாட்டு விழா இந்துக் கல்லூரி மைதானத்தில் கடந்த 01.05.2017 அன்று நடைபெற்றது.

இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வட மாகாண சபை உறுப்பினர் GT லிங்கநாதன் தனது பிரதம உரையில், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்பட்ட மேலதிக ஆசனங்களில் ஒன்றை 5 வருடங்களுக்கு பகிரப்பட்டதை யாவரும் அறிவோம்.

முதல் வருடத்திற்கான பங்கீடு தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு வழங்கப்பட்டு மேரி கலா அவர்கள் பதவியேற்றிருந்தார். எனினும் தமிழர் விடுதலைக் கூட்டணி கூட்டமைப்பில் இருந்து 2013 வெளியேறியதையடுத்து மேரி கலா அவர்கள் தமிழரசு கட்சியின் முல்லை மாவட்ட செயலாளராக பதவியேற்று ஒரு வருடங்களும் ஆறு மாதங்களும் மாகாண சபையில் உறுப்பினராக பதவி வகித்ததன் பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எப் க்கான சுழற்சி முறை ஆசனத்தை வவுனியாவை சேர்ந்த எம்.பி.நடராஜா அவர்களுக்கு வழங்கியது. இவர் ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் பதவியில் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து ரெலோ அமைப்பிற்கு கடந்த யூலை மாதம் மயூரன் அவர்களுக்கு வழங்கியிருந்தது. மயூரன் இளம் வேட்பாளராக களம் இறங்கியவர் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும் அவரின் நியாயமான அரசியல் பயணம் சிறப்புற அமைய மயூரன் ஒரு வருடகாலமான இவ் வருட யூலை மாதம் பதவி விலகுவதுடன் கூட்டமைப்பு அவ் ஆசனத்தை எமது கட்சிக்கு வழங்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

அந்த வகையில் எமது கட்சியின் தீவிர ஆதரவாளர்களான உங்களால் இதனை இன்னும் தெளிவாக சமூகத்திற்கு கொண்டு செல்வதுடன் எமது கட்சியின் துடிப்பு மிக்க உங்கள் கிராமத்தின் எனது நண்பன் சந்திரகுலசிங்கம் மோகன் அவர்களுக்கு எமது கட்சி வழங்கும். அதன் பின்னர் உங்கள் பிரதேசத்தின் அபிவிருத்திகள் இன்னும் வலுவுள்ளதாக மாறும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -