ஞானசார தேரர் விவகாரம் தற்போது ஒரு வித பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேரரை கைது செய்து விட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டு வருகின்றன.
நாட்டின் ஆட்சியாளர்களே ஞானசார தேரர் மீது கைது நடவடிக்கைளை போலியாக சித்தரித்துள்ளனர் என பொதுபல சேனாவினர் குற்றம் சுமத்தி வருகின்றனர்.மேலும், நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிங்கல ராவய அமைப்பின் பொதுச் செயலாளர் மாகல் கந்தே சுதந்த தேரர் கூறுகையில்,
கடந்த 20ஆம் திகதி குடிபோதையில் வந்த பொலிஸார் குருநாகல் நகரில் வைத்து ஞானசார தேரர் மீது தாக்குதல் நடத்தவும் முயற்சி செய்தனர்.பொலிஸாருக்கு இந்த அதிகாரத்தை கொடுத்தவர் யார் என்பதன் உண்மைத் தன்மை கண்டறியப்பட வேண்டும். இப்போதைய ஆட்சியாளர்களின் திட்டமே இது என மாகல் கந்தே சுதந்த தேரர் கூறியிருந்தார்.
இதேவேளை 20ஆம் திகதி குருநாகலில் இடம் பெற்ற பதற்ற நிலையைத் தொடர்ந்து சட்டம் மற்றும் ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஞானசாரரை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டுள்ளார்.அவர்களின் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற உரையாடல் பதிவு காணொளியாக தற்போது பரவி வருகின்றது.
இதன்போது அமைச்சரிடம் அதிகாரப்போக்குடன் உரையாடிய ஞானசார தேரர் தன்னை கைது செய்ய பொலிஸாரை அனுப்பியது யார்? என்று கடுமையான தொணியுடன் கேட்கின்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் “என்னை மிரட்டும் பாணியுடம் பேச வேண்டாம், தேரராக நடந்துகொள்ளுங்கள் எனவும் கேட்டுக்கொள்கின்றார்.
அதனைத் தொடர்ந்து தேரர் “நாம் நாட்டில் நடைபெறும் முறைகேடுகளையே அடையாளப்படுத்தினோம். அதற்காக பொலிஸாரை ஏவுவதா? அதற்கான அனுமதியை உங்களுக்கு யார் கொடுத்தது என வினவுகின்றார்.
அதற்கு அமைச்சர் பதில் அளிக்கையில் “நாட்டில் பாரம்பரியம் அழிக்கப்படுகின்றது என்றால் அவ்வாறான இடத்தினை அடையாளப்படுத்தி விட்டே பொலிஸார் மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.கைது உத்தரவு குறித்து எனக்கு தெரியாது. இந்த விடயம் தொடர்பில் நான் மிகுந்த வேதனை அடைகின்றேன் எனவும் அமைச்சர் கூறுகின்றார்.
அதனைத் தொடர்ந்து ஞானசாரர் அழைப்பினைத் துண்டித்து விட்டு, நல்லாட்சி அரசினை திட்டுவதும் குறித்த காணொளியில் பதிவாகி உள்ளது.இந்த இடத்தில் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும், தேடப்பட்டு வரும் நபராகவும் கூறப்படும் ஞானசார தேரர் சட்ட அமைச்சருடன் தொலைபேசியில் உரையாடியதன் பின்னரே தற்போது தலைமறைவாகி உள்ளதாக கூறப்படுகின்றது.
எனவே இந்த கைது, மற்றும் தலைமறைவு நாடகங்கள் அனைத்தும் அரசு தரப்பினரின் மறைமுக நாடகமாக இருக்கலாம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
VIDEO (waiting..(5sec))