க.கிஷாந்தன்-
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட அட்டன் ஹைலண்ஸ் கல்லூரியின் 125ஆவது ஆண்டு விழாவும், பரிசரிளிப்பு நிகழ்வும் கல்லூரியின் அதிபர் ஆர்.ஸ்ரீதரன் தலைமையில் 29.06.2017 அன்று வியாழக்கிழமை அட்டன் டி.கே.டபிள்யூ கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த வைபத்தில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டார்.
இதன்போது கல்லூரிக்கு நவீன முறையிலான புதிய கட்டடம் அமைப்பதற்கான 10 ஏக்கர் காணியின் ஆவணங்களை கல்லூரி சமூகத்திடம் ஜனாதிபதி கையளித்தார்.
அத்தோடு கல்லூரியின் 125 ஆவது ஆண்டை சிறப்பிக்கும் முகமாக சிறப்பு தபால் முத்திரை வெளியிடும் இடம்பெற்றதோடு, கல்லூரியின் த ஹைலண்டர் சஞ்சிகை வெளியீடும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கௌரவ அதிதிகளாக இராஜாங்க கல்வி அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், முஸ்லிம் விவகாரம் மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீம், மத்திய மாகாண ஆளுநர் நிலூக்கா ஏக்கநாயக்க, மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம்.ரமேஷ்வரன், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான ஆறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான், மத்திய மாகாண சபையின் இ.தொ.கா உறுப்பினர்கள், விசேட அதிதியாக கல்லூரியின் பழைய மாணவரான பி.சுந்தரலிங்கம், அட்டன் வலய கல்வி பணிப்பாளர், அதிபர், முன்னாள் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
படங்கள்: ஜனாதிபதி ஊடகப் பிரிவு