1,526 பேர் படுகொலை, 317 துப்பாக்கிச் சூட்டுசம்பவங்கள்

2014 தொடக்கம் 2016ஆம் ஆண்டு வரையான மூன்று வருட காலப்பகுதிக்குள் நாட்டில் 1,526 பேர் படுகொலைசெய்யப்பட்டுள்ளதோடு, 317 துப்பாக்கிச் சூட்டுசம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

2015ஆம் ஆண்டிலும் பார்க்க 2016இல் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதோடு, பாதாள குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த அரசு விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மஹிந்த ஆதரவு கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில சட்டமும் ஒழுங்கும் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சரிடம் 2014 - 2016 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பிலும் அதனைக்கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் நேற்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் சாகல ரத்னாயக்க, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 112, 98, 107 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதேபோன்று, 2014, 2015, 2016 ஆம் ஆண்டுகளில் முறையே 548, 476, 502 மனித படுகொலை சம்வங்களும் பதிவாகியுள்ளன.

2014ஆம் ஆண்டுடன் 2016ஆம் ஆண்டை ஒப்பிடும் போது குற்றச்செயல்கள் குறைந்துள்ளன. எனினும், 2015ஆம் ஆண்டுடன் 2016ஆம் ஆண்டை ஒப்பிடும் போது குற்றச்செயல்கள் சிறிதளவு அதிகரித்துள்ளன. குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளது தொடர்பில் அரசுக்கு மகிழ்ச்சியோ திருப்தியோ இல்லை.

பாதாள குழுக்கள் மற்றும் திட்டமிட்ட படுகொலைகள் சம்பந்தமாக விசாரணை செய்வதற்கு விசேட குற்றத்தடுப்புப் பிரிவொன்று இயங்கி வருகின்றது. அதன் கீழ்இயங்கும் குற்றப்புலனாய்வுப் பிரிவொன்றை பிரிதிப் பொலிஸ் மாஅதிபர் ஒருவரின் கீழ் கொண்டு வந்து அதில் மறுசீரமைப்புக்களையும் மேற்கொண்டுள்ளோம்.

அதன் செயற்பாடுகளை என்னால் விளக்க முடியாவிட்டாலும் பாதாள மற்றும் திட்டமிட்ட படுகொலைகளை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம் என்பதை சபையில் உறுதியாக குறிப்பிடுகின்றேன்.“ என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -