எம்.ஜே.எம்.சஜீத்-
அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் 2011 ஆம் ஆண்டு உயர்தர பிரிவில் கல்வி கற்ற மாணவர்கள் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்வும் ஒன்று கூடலும் (10) இன்று அக்கரைப்பற்று டி.எப்.சி ஹோட்டலில் (TFC Hotel) நடைபெற்றது.
இதன் போது 2011 ஆம் ஆண்டு உயர்தர பிரிவு மாணவர்களுக்கான விசேடமாக டிசேர்ட் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் எதிர்கால சந்ததினரின் கல்வி நடவடிக்கைகள் பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையின் அதிபர் கமர்டின், உயர்தர ஆசிரியர்களான எம்.எஸ்.எம்.ஹம்துன், ஏ.றியாஸ் முகம்மட், எம்.எச்.எம்.றமிஸ், எம்.ஏ.டி.தலில் அபூபக்கர் மற்றும் அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனையின் உதவி கல்வி பணிப்பாளர் கலாநிதி எம்.ஜ.எம்.ஹனிபா இஸ்மாயில் ஆகியோர்களும் 2011 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களும் கலந்து கொண்டனர்.