கொடகே தேசியத் தமிழ் ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகளுக்கானப் போட்டி - 2017

கொடகே நிறுவனம் நாடாத்தும் தமிழ் ஆக்க இலக்கிய கையெழுத்துப் பிரதிகள் போட்டிக்கெனப் பிரசுரிக்கப்படாத நாவல். சிறுககைத்தொகுப்பு, கவிதைத்தொகுப்புக்கான கையெழுத்துப் பிரதிகள் கோரப்பட்டுகின்றன. நாவல்
போட்டிக்கு அனுப்பப்படும் நாவலுக்கான கையெழுத்துப் பிரதி 160 பக்கங்களுக்கு குறையாமலும், 300 பக்கங்களுக்கு அதிகரிக்காமலும் இருத்தல் வேண்டும்.

பரிசுத் தொகை ரூபா 100,000.00

சிறுகதைத் தொகுப்பு சிறுகதைத் தொகுப்புக்கான கையெழுத்துப் பிரதி 10 சிறுகதைகளுக்கு குறையாமலும், 15 கதைகளுக்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும். 80 பக்கத்துக்குக் குறையாமலும் 240 பக்கங்களுக்கு குறையாமல் இருத்தல் வேண்டும்.

பரிசுத் தொகை ரூபா 25000.00

கவிதைத் தொகுப்பு

கவிதைத் தொகுப்புக்கு அனுப்படும் கையெழுத்துப் பிரதி; 50 கவிதைகளுக்கு குறையாமலும்,75 கவிதைகளுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 56 பக்கத்துக்குக் குறையாமலும் 160 பக்கங்களுக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும்.

பரிசுத் தொகை ரூபா 25000.00

எல்லா பிரதிகளும் 1-8 (A5) அளவில் இருத்தல்; வேண்டும். பிரதி 12 Point Baamini Font யில் கணனியில் தட்டெழுத்துச் செய்யப்பட்டு அனுப்பப்படல் வேண்டும். மேற்படி போட்டிகளுக்கு அனுப்பபடும் கையெழுத்துப் பிரதிகளில் உள்ளடங்கும் எந்தவொரு ஆக்கமும் ஏலேவே எந்த வழியிலும் பிரசுரமாகத ஆக்கங்களாக இருத்தல் வேண்டும். 

எந்தவொரு பிரதியின் உள்ளடக்கம் இலங்கை தேசிய சமூகக் கலாச்சாரத்தைப் பாதிக்காத வகையில் அமைந்திருத்தல் வேண்டும்.  கணனி தட்டச்சுச் செய்யப்பட்டு அனுப்பப்படும் பிரதியின் எந்தவொரு இடத்திலும் படைப்பாளியின் எந்தவொரு விபரங்களும் இடம்பெறலாகாது. பிரதியைப் பற்றிய சுருக்கக் குறிப்பும், படைப்பாளியைப் பற்றிய சுய விபர விண்ணபமும் பிரத்தியேகமாக பிரதியுடன் இணைத்து அனுப்பப்படல் வேண்டும். 

இப்போட்டிக்கான நடுவர் தீர்மானமே இறுதியானது.

கையெழுத்துப்; பிரதிகள் எதிர் வரும் 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ந் திகதிக்குள் மேற்படி விலாசத்திற்கு தபால் மூலமாகவோ, நேரடியாகவோ கையளிக்கப்படல் வேண்டும். மேலதிக விபரங்களுக்கு - 0778681464 - 0776578605

தேசபந்து சிரிசுமன கொடகே,
அமைப்பாளர்,
உபாலி லீலாரத்ன,
இணைப்பாளர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -