கிராண்ட்சிலாம் போட்டியான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவிற்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் 3-ம் நிலை வீராங்கனை சிமோனா ஹாலெப் (ரூமேனியா)- லத்வியா வீராங்கனை ஜெலீனா ஆஸ்டாபென்கோ உடன் மோதினார்.
ஆஸ்டோபென்கோ இந்த தொடருக்கான தரவரிசை பெறாத வீராங்கனை. இதனால் ஹெலெப் எளிதாக வென்று பிரெஞ்ச் ஒபனை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது.
முதல் செட்டை ஹாலெப் 6-4 என எளிதில் வென்றார். ஆனால் 2-வது செட்டில் ஆஸ்டோபென்கோ ஹாலெப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தார். அவர் 2-வது செட்டை 6-4 எனக் கைபற்றினார்.
20 வயது இளம் மங்கை ஜெலீனா ஆஸ்டாபென்கோ
இதனால் வெற்றியை தீர்மானிக்கும் 3-வது செட் கடுமையான இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஆஸ்டோபென் கோ 6-3 என எளிதில் அந்த செட்டைக் கைப்பற்றி ஹாலெப்பை வீழ்த்தினார்.
இந்த வெற்றியின் மூலம் மிகவும் இளம் வயதில் (20 வயது) 1997-ற்குப் பிறகு பிரெஞ்ச் ஓபனை வென்ற முதல் வீராங்கனை மற்றும் 2006-க்குப் பிறகு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனை என்ற பெருமையை பெற்றார்.
2-ம் இடம் பிடித்த ஹாலெப்
கடைசியாக 1983-ம் ஆண்டு தரவரிசை பெறாத ஒரு வீராங்கனை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். தற்போது ஆஸ்டோபென்கோ முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளார்.
கடைசியாக 1983-ம் ஆண்டு தரவரிசை பெறாத ஒரு வீராங்கனை பிரெஞ்சு ஓபன் இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தார். தற்போது ஆஸ்டோபென்கோ முன்னேறி கோப்பையையும் வென்றுள்ளார்.