சவூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்புக் காலம் ஜுன் 25 இல் முடிவடைகிறது



ஏ.எச்.ஏ. ஹுஸைன் -

வூதி அரேபியாவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்போருக்கான பொது மன்னிப்புக் காலம் ஜுன் 25 இல் முடிவடைவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

பல்வேறுபட்ட தொழில்களின் நிமித்தம் சவூதி அரேபியாவுக்குச் சென்று அங்கு தமது தொழில் ஒப்பந்த கால வீசாக்கள் முடிவடைந்த போதும் சட்டவிரோதமாக இன்னமும் தங்கியிருப்போரை பொதுமன்னிப்பின் அடிப்படையில் தத்தமது நாட்டுக்கு சிக்கலின்றி அனுப்பி வைப்பதற்காக சவூதி அரேபிய அரசாங்கம் அறிவித்த 3 மாத பொது மன்னிப்புக் காலம் கடந்த மார்ச் 21ஆம் திகதி ஆரம்பித்தது.

இந்த பொது மன்னிப்புக் காலப்பகுதியைப் பயன்படுத்தி சவூதி அரேபியாவில் சட்ட விரோதமாகத் தங்கியிருந்த சுமார் 3 ஆயிரத்து 500 இலங்கையர்கள் ஏற்கெனவே வெளியே வந்து தம்மைப் பதிவு செய்து கொண்டு நாடு திரும்ப முன்வந்துள்ளதாக பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இன்னமும் ஜுன் 25 வரை மீதமுள்ள ஒரு வார கால பொதுமன்னிப்புக் காலத்தில் இன்னமும் சவூதி அரேபியாவில் மறைந்து வாழும் இலங்கையர்கள் வெளிவந்து தம்மைப் பதிவு செய்து கொண்டு சட்டச் சிக்கலின்றி நாடு திரும்ப முன்வருவார்கள் என எதிர்பார்ப்தாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -