தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா பிரதேச செயலக பிரிவில் பதிவு செய்யப்பட்ட இளைஞர் கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு நிகழ்வுகளின் இறுதி நிகழ்வான வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு பிரதேச சம்மேளன தலைவர் திரு சு.காண்டீபன் தலைமையில் நெளுக்குளம் ஊர்மிளா கோட்ட இளையநிலா இளைஞர் கழக மைதானத்தில் 25.06.2017 அன்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமானது.
அமனா கழகத்தின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் விருந்தினர்கள் வரவேற்கப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது.
29ஆவது பிரதேச விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வின் பிரதம அதிதியாக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் திரு ஸ்ரீகரன் கேசவன் அவர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
சிறப்பு அதிதிகளாக மீன்பிடித் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு பூ.பத்மநாதன் , தேசிய சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரும் மாவட்ட சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான திரு இராஜசிங்கம்,விளையாட்டு பிரிவிற்கான வவுனியா பொலிஸ் அதிகாரி திரு திசாநாயக்க , நிஸ்கோ முகாமையாளர் திரு அனுரசாந்த, தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் திரு செ.சந்திரகுமார் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள்.
கௌரவ அதிதிகளாக வவுனியா வடக்கு(நெடுங்கேணி) பிரதேச சம்மேளனத்தின் தலைவர் திரு குணவர்மன், நியூ பைட் விளையாட்டுக்கழக தலைவர் திரு எ.ஜோன்சன், நியூ பைட் துடுப்பாட்ட முகாமையாளர் திரு கமல், நெளுக்குள பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு சுபசிங்க ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
பெருந்திரளான இளைஞர்களுடன் ஊர்மிளா கோட்ட பொது மக்களுக்கான சங்கீத கதிரை, கிடுகு பின்னல், தேங்காய் துருவுதல், சிறுவர்களுக்கான 200m தடகள போட்டிகள்,
கழகங்களுக்கு இடையிலான கயிறு இழுத்தல் மற்றும் கண்காட்சி கரப்பந்தாட்ட போட்டி போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது. நிகழ்வுகளை தமிழ் தேசிய இளைஞர் கழகத்தின் திரு கு.சிரஞ்சீதன் தொகுத்து வழங்கியிருந்தார்.