சவூதிஅரேபியா றியாத்தில் விபத்தில் சிக்கி மரணித்து 3 வருடங்களாகியும் நஸ்டயீடு வழங்கப்பட்டவில்லை..!

எம்.எம்.ஜபீர்-
ம்மாந்துறையை சேர்ந்த ஏ.ஆர்.ஏ.எம்.முஹம்மது முபாஸ் என்பவர் குடும்ப கஸ்டம் காரணமாக 2011ஆம் ஆண்டு சவூதிஅரேபியா றியாத் நாட்டிற்கு பணியாளராக சென்று 2014ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற விபத்தில் சிக்கி மரணித்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இதுவரைக்கும் அவருடைய குடும்பத்திற்கு நஸ்டயீடு வழங்கப்பட்டவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

குடும்பத்தில் ஐந்து சகோதர்களில் இரண்டாவதான இவர் 1989 ஆண்டு பிறந்தார். மூத்த ஆண்பிள்ளையாக இருந்தமையால் குடும்ப வறுமை காரணமாக வீட்டுச் சுமையைக் குறைப்பதற்கும் சகோதரிகளுக்கு வீடு கட்டுவதற்காகவும் என வெளிநாடு சென்றிருந்தார். தனது கனவை நனவாக்க முடியாது இவர் விபத்தில் மரணித்தமை குடும்பத்திற்கு பாரிய இழப்பாகும். இவருடைய குடும்பத்தின் நிலையை கருத்தில் கொண்டு இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஊடாக நஸ்ட ஈட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளுமா? 

2011.04.17 ஆம் திகதி தொழில் புரிய சென்ற இவர் வேலை செய்து கொண்டிருக்கும் போது 2014.08.27 விபத்தில் சிக்கி மரணித்தார். சவூதி அரேபியாவின் றியாத் நகரில் Shibh Al-Jazira Contracting கம்பனியில் பணிபுரியும் போது இவர் வேலைத்தளத்தில் விபத்துக்குள்ளனத்திற்கான நஸ்டஈட்டை துரிதமாக பெற்றுத்தர கோரி ஜனதிபதி, பிரதமர், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு என்பவற்றிற்கு பலமுறை பல கடிதங்களை அனுப்பியும், முயற்சி செய்தும் எதுவித பலனும் கிட்டவில்லை குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

சவூதி தூதரகம் ஊடாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நஸ்டயீட்டு கொடுப்பனவை பெற்றுத் தருமாறு குடும்பத்தினர் கோரிக்கை விடுக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -