ஜெமீலின் முயற்சியால் சாய்ந்தமருதுக்கு 50 வீடுகள்..!

எம்.வை.அமீர்-
ண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றின்போது சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபா முன்வைத்த கோரிக்கை ஒன்றை நிறைவேற்றும் பொருட்டு, 50 வீடுகளை அமைத்துக்கொடுக்க அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன் இணக்கம் தெரிவித்து, அதற்கான நடவடிக்கைகளை எடுக்க கோரிய, அமைச்சரின் கடிதத்தை கையளிக்கும் நிகழ்வு 2017-06-26 ஆம் திகதி பெருநாள் தொழுகையைத் தொடர்ந்து சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது.

அமைச்சரின் சார்பில் குறித்த கடிதத்தை கலாநிதி ஏ.எம்.ஜெமீல் பள்ளிவாசலின் தலைவர் வை.எம்.ஹனிபாவிடம் கையளித்தார். குறித்த கடிதத்தில் 50 வீடுகளையும் நிர்மானிப்பதற்கான காணி மற்றும் வீடுகள் தேவைப்படுபவர்களது விபரங்கள் கோரப்பட்டுள்ளது. இங்கு கருத்துத்தெரிவித்த வை.எம்.ஹனிபா பள்ளி நிருவாகத்துடன் பேசி அதற்கான தகவல்களைப் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்தார்.

பள்ளிவாசலின் சார்பில் அதன் தலைவர் வை.எம்.ஹனிபா 100 வீடுகள் தேவை என்று குறிப்பிட்டிருந்தார் அதில் 50 வீடுகளை அமைத்துக் கொடுக்க அமைச்சர் ஒத்துக்கொண்டிருந்ததும் குறித்த வீடுகள், வீடுகள் அற்ற திருமண வயதுள்ள பெண்களைக்கொண்ட வசதி குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -