சவூதி அரேபியாவில் தடையை மீறியதால் 73 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்

வூதி அரேபியாவில் பெண்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்ற தடையை மீறியதால் ஏற்கனவே 73 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் மனித உரிமை போராளி ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.படத்தின் காப்புரிமை லொஜைன் அல் ஹத்லூல், என்னும் அவர், டம்மாமில் உள்ள கிங் ஃபாத் சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார் என சர்வதேச மனித உரிமை அமைப்பான அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

மேலும் ஹத்லூல், அவரின் குடும்பம் மற்றும் அவரின் வழக்கறிஞரை தொடர்பு கொள்ள அனுமதிக்கப்படவில்லை எனவும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் தெரிவித்துள்ளது.

2014 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு எமிரேட்டுகளிலிருந்து செளதி அரேபியாவிற்கு வாகனம் ஓட்டி வர முயன்ற போதும்  ஹத்லூல் கைது செய்யப்பட்டார்.

உலகிலேயே பெண்கள் வாகனம் ஓட்டுவதைத் தடை செய்துள்ள ஒரே நாடு சவூதி அரேபியாதான்.

ஹத்லூலின் சமீபத்திய கைதிற்கான காரணம் குறித்து அதிகாரிகள் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும் அவர் அரச வழக்கறிஞர்களால் விசாரிக்கப்படுவதற்காக ரியாதிற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

ஹத்லூலை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், மேலும் "அவருக்கு தொடர்ந்து தொல்லை கொடுப்பது முட்டாள்தனமானது என்றும் அது நியாயமற்றது" என்றும் அம்னெஸ்டி இண்டர்நேஷ்னலைச் சேர்ந்த சமா ஹடிட் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை ஆர்வலராக, செளதி அரசால் தொடர்ந்து மறுக்கப்படும் பெண்களின் உரிமை குறித்து அமைதியான முறையில் பணிபுரிவதால் அவர் இவ்வாறு இலக்கு வைக்கப்படுகிறார் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவது சட்டரீதியாக தவறில்லை என்ற போதிலும் ஆண்களுக்கு மட்டுமே ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுகிறது; மேலும் பெண் ஓட்டுநர்களுக்கு போலிஸாரால் அபராதம் விதிக்கப்படுகிறது.

நவம்பர் 2015 ஆம் ஆண்டில் ஹத்லூல், செளதி அரேபியாவின் தேர்தலில் பங்கு கொண்டார்; அந்த ஆண்டில் தான் அங்கு பெண்கள் வாக்களிக்கவும் தேர்தலில் போட்டியிடவும் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் ஹத்துல்லாவின் பெயர் வாக்குச் சீட்டில் சேர்க்கப்படவில்லை.BBC
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -