முஸ்லிம்களது பிரச்சினைகளைக் கண்டறிய ஆணைக்குழு அமைக்குமாறு விடுத்துள்ள கோரிக்கை வரவேற்புக்குரியது முஸ்லிம் முற்போக்கு முன்னணி

எம்.எஸ்.எம்.ஸாகிர்-

முஸ்லிம்கள் தொடர்பான பிரச்சினைகளை ஆராய்ந்து சிபாரிசுகளை மேற்கொள்வதற்கு ஆணைக்குழுஒன்றை அமைக்குமாறு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்தி விடுத்துள்ள வேண்டுகோள் வரவேற்புக்குரியது என முஸ்லிம் முற்போக்கு முன்னணி தெரிவிக்கின்றது.

கூட்டு எதிர்க்கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் பேசுகையிலே அதன் செயலதிபர் ஏ. எச்.எம். அஸ்வர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலு கூறியதாவது,

இரண்டு பக்கத்திலும் உள்ள விஷயங்களை நிதானமாக ஆய்வு செய்து ஒரு முடிவுக்கு வந்து அதன் மூலமாக முஸ்லிம்கள் எதிர்நோக்கியுள்ள பல பாரிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு இப்படியான ஆணைக்குழு அத்தியாவசியமாகத் தேவைப்படுகின்றது. இதனை ஜனாதிபதி நிறைவேற்றித் தருவார் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

அதேபோன்று அளுத்கமையில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்தும் ஓர் ஆணைக்குழு நியமிப்பதாகவும் அரசாங்கம் பதவிக்கு வந்தவுடன் அறிவித்தது. ஆனால் இன்று வரையிலே அது நிறைவேற்றப்படவில்லை. ஏன் என முஸ்லிம் சமுதாயம் கேள்வி எழுப்புகின்றது.

இன்னொரு ஆணைக்குழுவை முஸ்லிம் சமுதாயம் கேட்டிருக்கின்றது. மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபினுடைய மரணம் சம்பந்தமாக விசாரணைக் குழு நியமிக்கும்படி அவருடைய பாரியார் உட்பட சேகு பஷீர் சேகுதாவூத் போன்றவர்களும் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர். அது குறித்தும் ஓர் ஆணைக்குழுவை நியமிக்க வேண்டி நாம் வற்புறுத்திக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம் என்றும் தெரிவித்த அஸ்வர்,

இந்த அரசாங்கத்திலுள்ளவர்களுக்கு தொந்தி வயிறு பெருத்துவிட்டது. எனவே அவர்கள் விளையாட்டரங்கில் இனி ஆட்டம் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எமக்குச் சொல்லித் தருபவர்கள் இலங்கை கிரிக்கட் சபை. தொந்தி விழுந்தவர்கள் கிரிக்கட் விளையாட முடியாது என விளையாட்டு அமைச்சர் கூறியதற்கு வேகப் பந்துவீச்சாளர், கெட்டிக்காரர் லசித் மாலிங்க பதிலளித்துள்ளார். அதாவது ஒரு கிளியின் பொந்தை எப்படி ஒரு குரங்கு அறியும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்காக வேண்டி இப்போது அவருக்கு ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆகவே அப்படியான ஒழுக்காற்று நடவடிக்கையை தொந்தி விழுந்த இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் நாட்டு மக்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில் அவர்களுக்கு தொந்தி விழுந்ததன் காரணமாக இனி அரங்கில் ஆட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதற்காக வேண்டி அரசாங்கத்தை விசாரிப்பதற்கு ஓர் ஒழுக்காற்றுச் சபை ஏற்படுத்த வேண்டும். அந்த சபையை இந்த நாட்டு மக்கள் ஒரு தேர்தலின் மூலமாக ஏற்படுத்த வேண்டும். எனவே அந்த ஒழுக்காற்று நடவடிக்கையை எடுப்பதற்கு வெகு சீக்கிரம் ஒரு தேர்தலை நடத்துமாறு அரசை வற்புறுத்திக் கேட்டுக் கொள்ள விரும்புகின்றோம் என்ற வேண்டுகோள்களையும் இதன் போது விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -