பாலமுனை வைத்தியசாலையின் இன்றைய நிலை என்ன ?


(வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் பாலமுனை பாரூக் அவர்களின் அறிக்கை)

1. ஒரு வருடத்திற்கு முன்னர் சிறு திருத்த வேலைக் காக கையளிக்கப்பட்ட சிறுவர்,மற்றும் பெண்கள் நோயாளர் விடுதி இதுவரை மீளத்திறக்கப்படவில்லை.

2 கட்டில்கள்,பெற்சீற்,மெத்தை என்பன பல ஆண்டுகளுக்கு முந்தியவை.வைத்தியசாலை அபிவிருத்தி சபை, வைத்திய சாலைப் பொறுப்பு வைத்திய அதிகாரி ஆகியோரால் விடுக்கப்படும் கோரிக்கைகள் செவியேற்கப்படவில்லை.

3 எவ்வித பிரதியீடுமின்றி MLt,MidWife ஆகியோர் மாற்றப்படுகின்றனர்.

4.வைத்திய சாலையிலுள்ள டாக்டர்கள் சிலர் வருடாந்த இடமாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.ஆயினும்,அவர்களின் இடங்களுக்கு புதிய டாக்டர்கள் பெயரிப்படவில்லை.

5 இதனோடு சேர்ந்து 
இயங்கிய மன நோயாளர் பிரிவு பிரித்து விடப்பட்டது. இதன் பணி,டாக்டர் வருகை தரும் தினம் எதுவும் சீராகத் தெரியவில்லை

6.வைத்திய சாலை அபிவிருத்தி சபையின்பல்வேறுபட்ட முயற்சியின் பின் சிறுவர்நோயாளர் விடுதிக்கு பக்கத்தில் நிர்வாகப் பிரிவுக்கான கட்டடப் பணிகள் ஆரம்பித்தன. ஆயினும் அது இடையில் நிற்கிறது.

7. சுகாதார சேவைப் பிரதி அமைச்சர் அவர்கள் பலமாதங்களுக்கு முன் இங்கு விஜயம் மேற்கொண்டு பல கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் அமைப்பதாக சொல்லிச் சென்றார்.அதன் பின்னர்,அது தொடர்பாக எந்த வித அதிகாரிகளும் இங்கு வந்து நடவடிக்கை யெடுத்த தாக தெரியவில்லை.

8.மாகாண சுகாதார அமைச்சரிடமும் இதுபற்றிய எமது வைத்தியசாலை தொடர்பானஅதிருப்தியை தெரிவித்து
இராஜினாமாக் கடித த்தையும்அபிவிருத்தி சபை கையளித்த து.ஆயினும் கடித த்தை ஏற்றுக் கொள்ளாத அமைச்சர் தொடர்ந்து நடவடிக்கை யெடுப்பதாகத் தெரிவித்தும் எமது வைத்தியசாலை பின்தள்ளப்பட்டே வருகின்றது.

9.காரியாலயப்பணிகளுக்கான கணனி,தளபாட வசதிகள் இல்லை.

10.முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கு நூறு வீதம் வாக்களித்த,அந்த கட்சியின் தேசிய,மாகாண சுகாதார அமைச்சர்களை பக்கத்து ஊர்களில் பெற்றுக் கொண்ட ஊர் பாலமுனை.அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பழமை வாய்ந்த, பிரபலம் பெற்றிருந்த தேவையான நிலப்பரப்பைக் கொண்டிருக்கின்ற அந்த ஊரின் வைத்தியசாலைக்கு நேர்ந்திருக்கின்ற அவலநிலை குறித்த கவலையை வைத்தியசாலையின் பிராந்திய அதிகாரிக்கும்
அமைச்சர்களுக்கும் வைத்தியசாலை அபிவிருத்தி சபை பல தடவை தெரிவித்திருக்கின்றது.

11.வைத்திய சாலை அபிவிருத்தி சபை,உள்ளே வீதி அமைப்பது,சிரமதானப்பணி,மின் விளக்குகள், வேலி போடுவது என்று பல பணிகளை அவ்வப்போது பொதுமக்களின் ஒத்துழைப்போடும் வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட நிதியில் இருந்தும் செய்து வந்திருக்கின்றது.

12.எனினும்,அதன் கோரிக்கைகளுக்கு பாராமுகம் காட்டப்படுகின்ற நிலைமையே தற்போது இருந்து வருகிறது.இதனால் வைத்தியசாலை அபிவிருத்தி சபையில் இருந்து அதன் உறுப்பினர்கள் இராஜினாமா செய்வதென்றும், ஜும்ஆபள்ளிவாசல்களின் நிர்வாகிகளின்கவனத்திறகு இதனைக் கொண்டு வந்து அபிவிருத்திப்பணிகளில் அவர்களொடு இணைந்து இயங்குவதென்றும் அச்சபை தீர்மானித்தது.

(அய்ஷத் ஸெய்னி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -