சாய்ந்தமருது வைத்தியசாலையை இணைப்பதற்கு ஒருபோதும் இடமளியோம்!



காரைதீவு நிருபர் சகா-

40வருடங்கள் பழைமைவாய்ந்த சாய்ந்தமருது மாவட்டவைத்தியசாலையை வேறெந்த
வைத்தியசாலையுடனும் இணைப்பதற்கோ அல்லது உப அலகாக இயங்குவதற்கோ நாம் ஒருபோதும்
இடமளிக்கமாட்டோம். 


இவ்வாறு நேற்று 28ஆம் திகதி புதன்கிழமை மாலை சாய்ந்தமருது ப.நோ.கூ.சங்கக்
கட்டடத்தில் சாய்ந்தமருது சூறா சபை நடாத்திய செய்தியாளர் மாநாட்டில்
திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டது.

சூறாசபையின் தலைவர் டாக்டர் எம்.ஜ.எம்.ஜெமீல் அங்கு சாய்ந்தமருது மாவட்ட
வைத்தியசாலையின் ஆரம்பம் மற்றும் தற்போதைய நிலைப்பாடு தொடர்பாக விளக்கமாக
விபரித்து இணைப்பு தமது சாய்ந்தமருதின் அடையாளத்தை இழக்கச்செய்துவிடும்
என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருது வைத்தியசாலையை கல்முனை அஸ்ரப் ஆதாரவைத்தியசாலையுடன் இணைத்து
முறிவுவைத்தியசாலையாக மாற்ற சுகாதார பிரதியமைச்சர் மேற்கொண்டுவரும் நடவடிக்கை
தொடர்பில் இவர்களது செய்தியாளர் மாநாடு இடம்பெற்றது.*
*சபையின் செயலாளர் சதாத் விரிவாக இணைப்பால் ஏற்படும் ஆபத்து அதனாலேற்படும்
பாதகம் பற்றி விரிவாக விளக்கமளித்தார்.*

*முடியுமானால் இவ்வைத்தியசாலையை தளவைத்தியசாலையாக தரமுயர்த்த உதவுங்கள்
என்றும் அதில் கேட்டுக்கொண்டனர். சாய்ந்தமருது பிரதேச சபையின் கோரிக்கையை
வலுவிழக்கச்செய்யும் ஒரு சதிவேலையாகவே நாம் இதனைப்பார்க்கின்றோம் எனவும் அங்கு
கருத்துத் தெரிவிக்கப்பட்டது.*

*செய்தியாளர்களின் வினாக்களுக்கும் சபையினர் பதிலளித்தனர்.*
*தாம் அறிந்தவகையில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சரோ பள்ளிவாசல் நிருவாகமோ
இதற்கு எவ்வித ஒப்புதலையும் வழங்கவில்லை என அறிகின்றோம் என சபையினர்
தெரிவித்தனர்.*

*எதுஎப்படியிருப்பினும் இணைப்பை நாம் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை. அதனையும்
மீறிசெய்யமுற்பட்டால் மக்கள்போராட்டமாக உருவெடுக்கும். என்றார்கள்.*a
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -