தோப்பூர் செல்வநகர் நீனாகேணி காணி பிரச்சினைக்கு தீர்வு





தோப்பூர் செல்வநகர் நீனாகேணி பிரதேசத்தில் வசிக்கும் பிரதேச முஸ்லிம்களின் காணியில் அண்மைகாலமாமாக ஏற்பட்டுவரும் பிரச்சினை தொடர்பில் 12 (திங்கள்) பி.ப. 3 மணியளவில் செல்வநகர் மஸ்ஜிதுல் ஹுதா பள்ளிவாசலில் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல்லாஹ் மஹ்ரூப் தலைமையில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது நிகழ்விற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் அரசாங்க அதிபர் புஸ்பகுமார மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர்,லாஹிர்,முன்னால் பிரதேச சபை உறுப்பினர் நிஸ்மி , பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்


இதன்போது அரசாங்க அதிபர் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் எவரும் அகற்றப்படமாட்டார்கள் என்பதுடன் குறித்த 49 ஏக்கர் காணிக்குள் உள்ள 44 நிரந்தர வீடுகளுக்கும் எந்த வித பிரச்சினைகளும் கிடையாது குறிப்பிட்ட 4 வகைகளின் கீழ் வசிப்பவர்களுக்கான அனுமதி பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்


01. புதைபொருள் பிரதேசம் மற்றும் நில அளவை மேற்கொள்ளல்
02. 44 நிரந்திர வசிப்பாளர்களை எல்லைப்படுத்தல்
03. பிரதேச செயலாளரால் அளவுகள் குறிக்கப்பட்ட கடிதம் வழங்கி வைக்கப்படும்
04. உரியவர்களுக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்


அரசாங்க அதிபர் காணி தொடர்பாக சிலர் கூறும் கருத்துக்களை பிரதேச மக்கள் நம்ப வேண்டாம் எனவும் காணி தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் தனக்கும் பிரதேச செயலாளருக்குமே அதிகாரம் உண்டு எனவும் குறிப்பிட்டார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -