வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகிய அரச பேரூந்து

க.கிஷாந்தன்-

துளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகெதர பகுதியிலிருந்து பதுளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று பதுளை கந்தேகெதர பிரதான வீதியில் தியனாகொட ஆலயத்திற்கு அருகாமையில் வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்து 30.06.2017 அன்று மதியம் இடம்பெற்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இவ்விபத்தில் பஸ்ஸில் பயணித்தவர்களில் 5 பேர் படுங்காயம்பட்டு பதுளை மற்றும் கந்தேகெதர ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்விபத்துக்கான காரணங்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -