ஏ.எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-
நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி, மற்றும் சமூக சேவைகள் ஒன்றியம் நடாத்திய இப்தார் நிகழ்வு இன்று(03) நிந்தவூர் அல்-அஷ்றக் தேசியக் கல்லூரி விழா மண்டபத்தில் இடம் பெற்றது.
அமைப்பின் தலைவர் ஏ.இப்றாகீம் (கபூர் ) தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன், NWC தலைவரும் முன்னாள் வட-கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருமான எம்.எச்.யாக்கூப் ஹசன், லகான் விளையாட்டுக் கழகத் தலைவரும், சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான எம்.எல்.எம்.றபீக், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எம்.ரி.ஜப்பார் அலி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், விளையாட்டுக் கழகங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் இறுதியில் அண்மையில் நடாத்திய மரதன் ஓட்டப் போட்டியில் முதலாம், இரண்டாம் இடங்களைப் பெற்ற வீரர்களுக்குப் பரிசுப் பொருட்களும் வழங்கப்பட்டன.