ஜெம்சித் (ஏ) றகுமான்-
மருதமுனை கல்பனா விளையாட்டுக் கழகத்தின் இப்தார் நிகழ்வும் கழகத்திற்கான புதிய சீருடை அறிமுக நிகழ்வும் இன்றைய தினம்(2017.06.09) மருதமுனையில் அமைந்துள் பீச் ஹோம்மில் விமர்சையாக நடைபெற்றது.இன்றைய தினம் புதிதாக அறிமுகப்படுத்த பட்ட கழக சீருடையானது கல்பனா விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.ஏ சலாம் காப்பன்டரி அவர்களின் அனுசரையில் வெளியிடப்பட்டிருந்தது.
கல்பனா விளையாட்டுக் கழகத்தின் முகாமையாளர் ஏ.ஏ சலாமிடமிருந்து கல்பனா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எம் முஜீப், செயலாளர் ஏ.ஆர்.ஜெம்சித்,பொருளாலர் ஐ.எல்.றிபாஸ் ஆகியோர் புதிய கழக சீருடையை உத்தியோக பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.