ஹிப்ளு மத்ரசாவுக்கான கட்டிட திறப்பும் இப்தார் நிகழ்வும்!






எம்.வை.அமீர்-

சாய்ந்தமருது வோலிவோரியன் சுனாமி வீட்டுத்திட்ட கிராமத்தில் உள்ள ஹிஜ்ரா பள்ளிவாசலின் மேல்மாடியில் அமையப்பெற்ற ஹிப்ளு மத்ரசாவுக்கான கட்டிட திறப்புவிழாவும் இப்தார் நிகழ்வும், 2017-06-14 ஆம் திகதி பள்ளிவாசலின் ஸ்தாபக தலைவர் சட்டம் ஒழுங்குகள் அமைச்சின் மேலதிக செயலாளர், ஏ.எல்.எம்.சலீமுடைய வழிநடத்தலின் கீழ் செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கிலங்கை அரபிக் கல்லுரியின் விரிவுரையாளர் அஷ்செய்க் ஏ.றமீஸ் (முப்தி) ஹாமீதி அவர்கள் கலந்துகொண்டு கட்டிடத்தை திறந்துவைத்ததுடன் மார்க்க சொற்பொழிவுமாற்றினார்.

மிக மோசமான முறையில் சுனாமியால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் வாழும் இப்பிரதேசத்து சிறுவர்களுக்கு, ஹிப்ளு மத்ரசா ஒன்றின் அவசியம் தொடர்பில், கிழக்கிலங்கை அரபிக் கல்லுரியின் விரிவுரையாளர் அஷ்செய்க் எம்.எம்.சலீம் எடுத்துக்கொண்ட முயற்சியின் பயனாக சவூதி அரேபியாவைச் சேர்ந்த கொடைவள்ளல் கலாநிதி இப்றாஹீம் செய்தானி அவர்கள் குறித்த கட்டிடத்தை அமைப்பதற்கான நிதி உதவியை வழங்கியிருந்தார்.

திறப்புவிழா மற்றும் இப்தார் நிகழ்வுகளின்போது பள்ளிவாசலின் உபசெயலாளர் றிஷாட் மஜீட் உட்பட பள்ளி நிருவாகத்தினர் மற்றும் முஹல்லாவாசிகளும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -