கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக்கின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி..!

எம்.ரீ. ஹைதர் அலி-
த்துல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்ற அனைத்து உலக வாழ் முஸ்லிம்களுக்கும் ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் பெரும்மகிழ்ச்சி அடைகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இறைவனிடத்தில் மிகவும் பெறுமதி மிக்கதும், புனித அல்குர்ஆன் அருளப்பெற்றதுமான அருள்மிகு ரமழான் மாதம் எம்மை விட்டு கடந்து சென்றுள்ள இந்நிலையில் இந்ரமழான் எமக்கு அதிகமான படிப்பினைகளையும் பயிற்சிகளையும் கற்றுத்தந்துள்ளது.

ரமழான் மாதத்தில் அதிகமான இபாதத்களிலும், துஆ பிராத்தனைகளிலும் எம்மை ஈடுபடுத்தக்கூடியதொரு வாய்ப்பினை அல்லாஹ் எமக்கு ஏற்படுத்தி தந்திருந்தான். அந்த வகையில் நாம் செய்த நல் அமல்களையும், துஆக்களையும் எல்லாம்வல்ல அல்லாஹ் அங்கீகரிக்க வேண்டும் எனவும் இத்தருனத்தில் பிராத்தித்துக் கொள்கின்றேன்.

இலங்கை உற்பட பல்வேறு நாடுகளில் தொடர்ச்சியாக பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துவரும் நிலையில் இன்று முஸ்லிம்கள் தமது ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர்.

குறிப்பாக எமது நாட்டைப் பொறுத்த வரையில் முஸ்லிம்கள் சிதறி வாழ்கின்ற பல்வேறுபட்ட பிரதேசங்களில் அவர்களின் உயிர்கள் மற்றும் உடைமைகள் சேதமாக்கப்பட்டும், பள்ளிவாயல்கள் உடைக்கப்பட்டும் பல்வேறு அநீதிகளை எதிர்கொண்டிருந்தனர். மேலும் இந்த நாட்டினுடைய நல்லாட்சி அரசாங்கம் சிறு பான்மை இனமான முஸ்லிம் மக்களினுடைய விடங்களில் மிகவும் பாராபட்சமாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இத்தகைய சந்தர்பங்களில் முஸ்லிம்களாகிய நாங்கள் மிகவும் பொறுமையோடு எங்களது செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தோம். ஆனால் பொறுமை என்பது தொடர்ச்சியாக எங்களுக்கு ஏற்படுத்தப்படும் அநீதிகளுக்கு எதிராக வாய்மூடி இருப்பதல்ல. மாறாக எங்களுக்கெதிராக தொடர்ச்சியாக இத்தகைய அநீதிகள் எற்படுத்தப்ப்படுமிடத்து அவற்றை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு செல்வதோடு, இறைவனிடத்தில் அதிகமான துஆ பிராத்தனைகளிலும் ஈடுபட வேண்டிய தேவைப்பாடும் எமக்கு காணப்படுகின்றது. 

அந்த வகையில் இன்றய தினம் எமக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கெதிராக அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பதற்கும், துஆக்கள் அங்கீகரிக்கப்படுவற்குமுரிய ஒரு சிறந்ததொரு சந்தர்ப்பமாகும். மேலும் ரமழான் மாதம் எமக்கு தந்த படிப்பினைகளையும் பயிற்சிகளையும் தொடர்ந்து வரும் காலங்களிலும் முன்னெடுப்பதோடு, இந்த பெருநாள் தின கொண்டாட்டங்களை ஏனைய சமூகங்களுக்கு முன்னுதாரணமிக்க ஒரு பெருநாள் கொண்டாட்டமாகவும் அமைத்துக்கொள்ள வேண்டும்.

எனவே இந்த பெருநாள் காலங்களில் மார்கத்திற்கு முரணான வீணான விடயங்களில் ஈடுபடுவது, பட்டாசுகளை கொளுத்துவது, வாகனங்களை வேகமாக செலுத்துவது, ஏனைய சமூகங்களுக்கு இடையூறு ஏற்படுத்துவது, வீணான செலவுகளில் ஈடுபடுவது போன்ற விடயங்களில் இருந்து முற்றாக தவிர்ந்திருப்பதோடு இவ்வாறான பெருநாள் தினங்களைக்கூட கொண்டாட முடியாத நிலையில் மிகவும் வறுமைக்கு மத்தியில் வாழும் எமது சகோதர சகோதரிகளுக்கு அதிகமான தான தர்மங்களை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இன்றைய தினம் ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடும் இந்நாட்டு மற்றும் உலகவாழ் முஸ்லிம் மக்களுக்கும் வெளி நாடுகளில் வாழக்கூடிய எமது அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மீண்டுமொருமுறை எனது ஈத்துல் பித்ர் நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -