ஞானசார தேரர் விவகாரம் ; ஜனாதிபதியிடம் முஸ்லிம் எம்பிக்கள் கேள்வி எழுப்பவேண்டும்

ஞானசார தேரரை ஜனாதிபதி தரப்பு பாதுகாப்பதாக ஏற்கனவே செய்திகள் பரவி இருந்த நிலையில் ஜனாதிபதியின்இணைப்பு செயளாலர் ஷிரால் லக்திலக இந்த விடயத்தில் நேரடியாக தலையிட்டுள்ளமை தொடர்பில் முஸ்லிம்எம்பிக்கள் கேள்வி எழுப்பவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டி வீ சானக கோரியுள்ளார்.

நான்கு பொலிஸ் குழுக்களால் தேடப்பட்டுவந்த ஞானசார தேரரை ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் ஷிரால்லக்திலகெவே சட்டத்தில் பிடியில் இருந்து பாதுகாக்க முன்னின்று பல வேலைகளை செய்துள்ளதாக ஆளும்தரப்பினர் சிலரே கூறிவருகின்றனர்.

ஞானசார தேரர் என்பவர் மஹிந்த ஆட்சியை கவிழ்க்க இந்த நல்லாட்சியால் பாவிக்கப்பட்ட ஒரு கருவி என நாம்அன்றில் இருந்து கூறிவருகிறோம்.இதை அன்று நம்ப மறுத்த முஸ்லிம்கள் இன்று ஏற்றுக்கொண்டுள்ளனர்.

அண்மையில் ஞானசார தேரருக்கு மின்னல் வேகத்தில் பிணை வழங்கப்பட்டது.இதன் பின்னணியில் ஜனாதிபதிஇருப்பதாகவும் துமிந்த திஸாநாயக்க வீட்டில் அவரை மறைத்து வைத்திருந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுவருகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியின் பணிப்புரையில் அவரது இணைப்புச் செயலாளர் ஷிரால் பின்னணியில் இருந்து ஞானசார தேரருக்கு சட்ட சலுகைகள் பெற்றுக்கொடுத்துள்ளதாக அரசியல் உயர்மட்டங்களில் இருந்து தகவல்வெளியாகியுள்ளன.

இது விடயமாக முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் எம் பிக்களும் ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்ப வேண்டும் எனபாராளுமன்ற உறுப்பினர் டி வீ சானக கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -