இறக்காமம் இம்தியாஸ்-
இறக்காமம் முகைதீன் கிரமாத்தில் வசிக்கும் சுமார் 79 குடும்பங்களுக்கு இலவச நீர் வழங்கும் நிகழ்வு இன்று 2017.06.06 ம் தினம் மாலை 05.00 மணியளவில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரான ரஹ்மத் மன்சூரின் முயற்சியின் பயணாக நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் நிதி உதவியுடன் இவ் இலவச நீர் இணைப்பு வழங்கட்டது.
இவ் நிகழ்வின் அதிதிகளாக நகர திட்டமிடல், நீர்வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளரான ரஹ்மத் மன்சூர், நிதாஉல் ஹைர் நிறுவனத்தின் உதவிப் பணிப்பாளர் பைசால் இப்றாகிம், தபைபினுல் ஹைர் நிறுவனத்தலைவர் மௌலவி எஸ். எச் ஆதம்பாவா அவர்களும் மற்றும் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பிராந்திய முகாமையாளர் ஜே.எம்.கரீம், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் உதவிப் பொது முகாமையாளர் எம்.எம்.நசீல், நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் இறக்காமம் பொறுப்பதிகாரி எம்.அப்துல் ஜப்பார், அவர்களும் மற்றும் இறக்காமம் முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜெபீர் மௌலவி, இறக்காமம் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெமில் காரியப்பர் (கி.மா சுகாதார அமைச்சின் இணைப்பு செயலாளர்), எம்.எல்.முஸ்மி, யூ.எல்.ஜிப்ரி, என்.எம்.ஆசிக் அவர்களும் மற்றும் இறக்காமம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மத்திய குழுவின் உறுப்பினர்களும், பயணாளிகளும் கலந்து சிறப்பித்தார்கள். இவ் நிகழ்வு இப்திருடன் மாலை 06.30 மணியளவில் இனிதே இறைவு பெற்றது.