முஸ்லிம் சமூகம் மஹிந்த ராஜபக்ஸவுக்கு செய்யாத குற்றத்துக்கு தண்டனை வழங்கியுள்ளது..!

மகால இனவாத பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என பாஉறுப்பினர் பியல் நிஷாந்த குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவரது ஊடக பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கடந்த காலங்களில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்னல்களை வழங்கிய பொது பல சேனாவின் இயக்குனர் யார்என்ற வினாவுக்கான பதிலை இலங்கை சமூகம் அண்மித்துவிட்டது. பொதுபல சேனாவின் இயக்குயர் யார் என்ற அலசலே பிரபல பத்திரிகைகளிலும் முக்கியஸ்தர்களின் வாய்களிலும் பேசு பொருளாக மாறியுள்ளது.

ஒவ்வொருவரும் நானெல்ல நீதான் அதனை இயக்கினாய், இயக்குகிறாய் என குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். இவ்வாறு குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் இலங்கை நாட்டின் முக்கியஸ்தர்கள்என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காலத்தில் ஏதேனும் சம்பவங்கள் இடம்பெற்றால் அவரை குற்றம் சுமத்துவதுதான் அனைவரதும் வேலை. அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்டமையே பாம்பின் உண்மை உறைவிடத்தை மக்கள்அறிந்துகொள்ளச் செய்துள்ளது.

இருந்தாலும் முஸ்லிம் சமூகம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுக்கு செய்யாத குற்றத்துக்கு மிகப் பெரியதண்டனை வழங்கியுள்ளமையும் இங்கு நினைவுபடுத்தத்தக்கது. இந்த அரசுக்கு ஞானசார தேரரை கைது செய்வது அவ்வளவு பெரிய விடமல்ல. அவர் அங்குமிங்கும் சுற்றி திரிந்தபோதெல்லாம் விட்டு இப்போது தேடியலைகிறார்கள்.அவரது விடயத்தில் இவ்வரசின் செயற்பாடே அவரைஹீரோவாக மாற்றி பத்திரிகைளில் கொட்டை எழுத்துக்களில் வரவும் செய்துள்ளது.

இப்போது விஜேதாச ராஜபக்‌ஷ ஞானசார தேரரை பாதுகாக்கிறார் என சிலர் கூறிவருகின்றனர் அப்படி என்றால்ஏன் அவரை இதுவரை விசாரிக்கவில்லை.இது தொடர்பில் கருத்து கூறியுள்ள நபரை பொலிஸார் விசாரணைசெய்யவேண்டும்.அவர் கூறுவது உண்மையென்றால் சம்பந்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். அதை விடுத்து சமூக வலைகளில் வீடியோக்கள் உலவுவதை வேடிக்கை பார்த்த வண்ணம் இருக்கக்கூடாது. இந்த விடயத்தில் நல்லாட்சியின் செயற்பாடுகளை பார்க்கும் போது அரசு தங்கள் தேவைகளுக்காக முஸ்லிம்களைவைத்து விளையாடுகிறது என்பதே எமக்கு புலனாகிறது.இல்லை என்றால் பொறுப்பில் இருப்பவர்கள் முன்னுக்குபின் முரணான கதைகளை சொல்லாமல் பொறுப்புடன் மக்களுக்கு இந்த விடயத்தை இவர்கள்தெளிவுபடுத்தியிருப்பார்கள்.

எது எப்படியோ பொதுபல சேனா அமைப்பானது அரசியல் இலாபம் கருதியே ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்பதுதற்போது நிரூபணமாகியுள்ள அதேவேளை சில அரசியல் சக்திகளின் விளையாட்டுப் பந்தாக முஸ்லிம் சமூகத்தைசிலர் மாற்றியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும் என அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -