வடக்கு மாகாண சபையின் தேசிய பட்டியல் ஆசனம் அடுத்து புளொட்டுக்கு-

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான சுழற்சிமுறை தேசிய பட்டியல் ஆசனம் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்)க்கு உரியது என்று அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


வடக்கு மாகாண சபைக்கு தேசிய பட்டியல் ஆசனங்கள் இரண்டு கிடைத்தன. அதில் ஒன்று முஸ்லிம் சிறுபான்மை இனத்தவர் என்ற ரீதியில் நிரந்தரமாக அஸ்மினுக்கு வழங்கப்பட்டது. 

அவர் நியமிக்கப்பட்ட நாள் தொடக்கம் இன்றுவரையிலும் ஒரு தமிழரசுக்கட்சி அங்கத்தவராகவே இருந்து வருகின்றார். மற்றைய ஆசனம் சுழற்சிமுறையில் வழங்கப்பட்டு வந்தது. இவ் விடயம் அனைத்து கட்சி உறுப்பினர்களாலும் ஏற்கனவே கலந்துரையாடப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.


அந்த வகையில் முதன்முறையாக முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த தமிழரசு கட்சி உறுப்பினர் மேரி கமலா குணசீலன் நியமிக்கப்பட்டு உறுப்பினராக 02 வருடங்கள் பதவி வகித்தார். அவருக்கு அடுத்ததாக ஒரு வருடகாலம் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியைச் சேர்ந்த நடராஜா பதவி வகித்தார். தற்போது ரெலோ கட்சியைச் சேர்ந்த எஸ்.மயூரன் பதவி வகித்து வருகிறார். அவருடைய ஒருவருட சேவைக்காலம் எதிர்வரும் யூலை மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த நிலையில் அடுத்த உறுப்பினருக்கு உரிய பதவி எமது கட்சியைச் (புளொட்) சேர்ந்த உறுப்பினருக்கே வழங்கப்பட வேண்டும். இவ் விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடனும் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தோம். அண்மையில் தொடர்ச்சியாக இவ் விடயம் தொடர்பில் கட்சி தலைமையிடம் கோரி வருகிறோம். அந்த வகையில் எந்த மாற்றங்களும் இடம்பெறாமல் எமது கட்சி உறுப்பினருக்கே குறித்த ஆசனம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -