இனவாதத்தை கக்கும் அமைச்சர்களைஅரசாங்கத்தில் வைத்துக்கொண்டு பொதுமக்களுக்கு சட்டம் போடுவதால்ஒன்றும் நடக்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். நாம் இந்த நாட்டில் இனவாதத்தை தூண்டுவதாக கூறியவர்கள் இப்போது அவர்களின் நிர்வாணம் வெளிப்பட்டுள்ளதால்செய்வது அறியாது முழித்துக்கொண்டு உள்ளனர்.
நாட்டில் எல்லா துறைகளிலும் பிரச்சினைகள்தலை துக்கியுள்ளன. தேர்தலுக்கு முகம் கொடுக்க முடியாமல்அரசாங்கம் அதனை வருடக்கணக்கில் பிற்போட்டு வருகிறது. இனவாதத்தை கக்கும் அமைச்சர்களை அரசாங்கத்தில் வைத்திக்கொண்டு பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும்சட்டம்போடுவதால் ஒன்றும் நடக்கப் போவதில்லை.
நாட்டில் வரலாற்றில் இல்லாத அளவு டெங்குநோய் அதிகரித்துள்ளது.வைத்திய சாலைகளில் மக்கள் கட்டில்கள்இல்லாமல் நிலத்தில் படுத்து உறங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. மத்திய வங்கியை நிர்ணயிக்க முடியாது சுகாதாரஅமைச்சை நிருவாக செய்ய தெரியாத விருதுபெற்ற நிதிஅமைச்சரும் சுகாதார அமைச்சரும் இந்த நாட்டில் மட்டுமே இருக்க முடியும் என அவர் குறிப்பிட்டார். இன்று அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் ஆஜரான பின்னர் ஊடகங்களுக்கு கருத்துவெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.