திருகோணமலையில் மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயம்






அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை மாவட்ட பெண்கள் அமைப்பின் காரியாலயம் நேற்று முன்தினம் (25.06.2017) தாக்கப்பட்டுள்ளதாகவும் முக்கிய சில பொருட்களும் குறிப்பாக முக்கிய ஆவணங்களும் சூரையாடப்பட்டுள்ளதை வலியுறுத்தி இன்றைய தினம் (27.06.2017) திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் அலுவலகத்திற்கு முன்பாக காலை 10.00 அளவில் கண்டன பேரணியுடனான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சனிக்கிழமை அலுவலகத்தினை மாலை பூட்டிவிட்டு சென்ற குறித்த பெண்கள் வலையமைப்பினர் திங்கட் கிழமை 26.06.2017 அன்று அலுவலகத்திற்கு வந்து பார்த்தபோது அலுவலகத்தினுள் இருந்த இரண்டு மடிக்கண்ணிகள் மற்றும் அலுவலகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஏP Bஏண் 4318 இலக்கத்தகடுடைய மோட்டார் சைக்கிள் ஒன்றும் களவாடப்பட்டிருந்ததை அவதானித்த வலையமைப்பினர் காவல்துறையிடம் முறையிட்டுள்ளனர்.

அலுவலக மலசலகூடத்தின் கூரைப்பகுதின் ஓடு களட்டப்பட்டிருந்ததுடன் அலுவலக மேசைக்கணணியும் இயக்கப்பட்டிருந்தது அத்துடன் அலுவலகத்திற்குள் சிகரெட் துண்டொன்றும் கிடைத்துள்ளது குற்றப்புளனாய்வு துறையினர் நேரில் விசாரனை மேற்கொண்டுவருவதுடன் மரபணு பரிசோதனைக்காக குறித்த சிகரெட் துண்டினையும் அனுப்பிவைத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

அத்துடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரிற்கு இவ்விடயங்களை முன்வைத்தும் பெண்னூரிமை மனித உரிமை செயற்பாட்டாளர்களுடைய பாதுகாப்பினை உறுதிப்படுத்தக் கோரியும் இன்று(27.06.2017 ) 12.00 மணியளவில் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

குறித்த பேரணியில் திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் உறுப்பினர்களுடன் நாம் இலங்கைப் பெண்கள் அமைப்பினரும் (கொழும்பு)இணைந்திருந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -