மகிந்த ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்போவதாக அறிவித்தார். நல்லாட்சி உருவாக அணி தயார்படுத்தப்படுகிறது. செய்தி ஊடகங்கள் வலுவாக மகிந்த ராஜபக்சவுக்கு எதிரான விமர்சனங்களை முன் மொழந்த வண்ணமே இருந்தன. முஸ்லீம் பிரதேசங்களில் மக்கள் மகிந்த இனவாதியாகவும் அவரை ஆதரிப்பவர்கள் இஸ்லாத்தின் விரோதிகளாகவும் பார்க்க ஆரம்பித்தனர். ரணில் அவரோடிணைந்த அணிகளுடன் சந்திரிகா, மைதிரி, அமைச்சர்கள் சிலர் ஒருங்கிணைந்தனர்.
தேசிய காங்கிரஸ் தலைவர் அதாஉல்லாஹ் மகிந்தவை ஆதரிக்கப் போவதாக அறிவித்தார். இங்கு நிகழ்வது சர்வதேசத்தின் திட்டமிடல் சம்பிக ரணவக்க தான் ஞானசாரவை உருவாக்கினர். அவர் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்த சூழ்ச்சிகளில் ஈடுபடுகிறார். எனக் கூறிய போது அவருடைய ஆதரவாளர்களான செயற்பாட்டாளர்கள் பலர் அது உண்மையாக இருந்தாலும் மகிந்த தோல்வியுற்றால் அதாஉல்லாஹ் பாராளுமன்ற பிரதிநிதியாக வர முடியாத நிலை உருவாகும் என உணர்ந்திருந்தார்கள். ஆனால் மைதிரியை ஆதரித்து அவர் தோல்வியுற்றாலும் அதாஉல்லாஹ் பாரளுமன்ற உருப்பினராக வர முடியுமென நம்பினர்.
இது தொடர்பாக பல விமர்சனங்கள் வெளிவந்த போதும் நாமும் அதிகாரம் இழக்கப்பட்டு விடுமோ என அச்சத்தில் இருந்த போது சம்பிக ரணவக்க நல்லாட்சி அணியை ஆதரிப்பதாக தெரிவித்து மகிந்த அரசை விட்டு விலகினார். அப்போது அாஉல்லாஹ் என்கின்ற ஒற்றை பாரளுமன்ற உறுப்பினர் சொன்னார் எனக்கு தெரியும் இங்கு யார் இனவாதி என்று அமைச்சரவையில் பதினைந்து ஆண்டுகள் இருக்கிறேன். இந்த சூழ்ச்சிகளில் யாரும் அகப்பட்டு விட வேண்டாம் என்றார். அவ்வாறான வேளையில் எம் முஸ்லீம் தலைவர்களும் ஒன்றன் பின் ஒருவராக தமது தனிப்பட்ட நலனை முன்னிருத்தியும் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டும் நல்லாட்சி அணியுடன் தாவினர்.
இதன் போது மகிந்த அக்கரைப்பற்றுக்கு வந்தார் என்னிடம் எமது கட்சியின் மாகாண சபை உறுப்பினராக இருந்த கெளரவ ஆரிப் சம்சுதீன் கூறினார் ;
இறுதியாக உதுமாலெப்பையும் தலைவரும்தான் எஞ்சுவார்கள் என அந்த கூட்டம் இடம் பெறும் போதே கூறி கட்சி மாறினர்.
அதாஉல்லாஹ் என்பவர் யார்?
முஸ்லீீம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரின் பாசறையில் அவரோடு பயணித்த வடகிழக்கு மாகாண சபையின் உறுப்பினர். தலைவரின் கரங்களைப் பல சந்தர்பங்களில் பலப்படுத்தி தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்றம் நுழைந்தவர். 2002 ம் ஆண்டு ரவூப் ஹக்கீம் நோர்வேயிடம் சரணகதியடைந்து வடக்கு கிழக்கில் வாழுகின்ற முஸ்லீம்களை இனக் குழு என கைச்சாத்திட்ட போது மூதூரிலிருந்து பொத்துவில் வரை கிழக்கு மக்களை தெளிவூட்டி பிரிந்து தனிக்கட்சி அமைத்தார். குறைந்த மக்கள் பலத்துடன் பாராளுமன்றம் சென்றார் அமைச்சரானார், நிறைவான சேவைகளை செய்தார்.
தனது கட்சியின் தேசிய மகாநாட்டுக்கு பிரதமராக இருந்த மகிந்தவை அழைத்து வந்து இரண்டு கோரிக்கைளை முன்வைத்தார்.
1.வடக்குகிழக்கு பிரிய வேண்டும்.
2.யுத்தம் நிறைவடைய வேண்டும்.
இரண்டையும் நிறை வேற்றினார். ஆயுத தாரிகளின் சுடுகலன்களுக்கு தன்னை முன்னிருத்தி உயிரை துச்சமென மதித்தார். எங்கும் அவர் நியாயமான சேவைகளை பாகுபாடின்றி முன்னெடுத்தார். தொழில் வாய்ப்புகளை ஆயிரக் கணக்கில் வழங்கினார். ஐந்து சதம் கூட பணம் பெறவில்லை என மாற்று கருத்து நிலை கொண்டவர்கள் மேச்சுகின்ற பணி செய்தார். பெருவாரியான வாக்குகள் இல்லாத போதும் அரசியல் அதிகாரங்களை பகிர்ந்தளித்தார்.
இவ்வாறான ஒருவனின் இந்த வாக்குறுதியில் உண்மை உண்டு என நம்பினோம். ஆனால் மக்கள் உணர்வூட்டப்பட்டவர்களாக அந்த மகனுக்கு காவியுடை கூட அணிவித்து மகிழ்ந்தனர். ஜனாதிபதி தேர்தலில் தோல்வியுற்றோம். பாராளுமன்ற பிரதிநிதித் துவத்தையும் இழந்தோம்.
இன்று என்ன நடக்கிறது.....?
அன்று மாதம் ஒன்று நடந்தது இன்று கிழமைக்கு ஒன்றாக நடக்கிறது. இனவாதிகள் அரசை சட்டத்தை கையில் எடுத்து செயல்படுகின்றனர். அன்று அதாஉல்லாஹ் சொன்னவை இன்று நிழல் போல தொடர்கிறது. ஞானசாரவை அன்று மறைமுகமாக இயக்கிய குழு இன்று வெளியே வந்து இயக்குகிறது. நோர்வேயின் அஜன்டாவில் மக்களை மயக்கிய இனத் துரோகிகள் இன்று அவர்களை கூட்டி ஊடக மகாநாடு போடுகிறார்கள். வசீம் தாஜூதீன் இருந்து வில்பத்துவரை அரசை காப்பாற்றும் நாடக மேடைகளாக மக்களை பயன்படுத்தப் படுகிறது. இன்று அதிகாரம் பெற்ற முஸ்லீம் தலைவர்கள் நாடக நடிகர்களாக வலம் வருவதை மக்கள் உணருகிறார்கள். இளைஞர்கள் எம்மை சூழ்ச்சி செய்து அதிகாரம் பெற்று விட்டாதாக உணருகிறார்கள்.தொழில் வாய்ப்புகள் விலைபேசி விற்க்கப்படுகிறது. இன்னும் கொந்தராத்து குப்பைகளின் கொமிசனுக்காக கட்டடங்கள் பாழாக்கப்படுகிறது.
இது தான் வரலாறு
சுதந்திர காற்றை கிழக்கில் சுவாசிக்க தனதுஉயிரை கையிலேந்திய அதாஉல்லாஹ் மீண்டும் உண்மையை சொன்ன போது தன் பதவியையும் அதிகாரத்தையும் இழந்தார். இன்று உலக நாடுகளின் நெருக்குவாரங்களில் நாடு சிக்கி திணறுகிற வேளை மீண்டும் தன் கருத்தை வெளியே கூறுகின்ற போது எம் சமுகம் ஏற்க தயாராக நிற்பது வரலாற்றில் மிகப் பெரிய மாறுதலாகும். சத்தியம் நிரூபிக்கப்படுகிறது.
அஸ்மி அப்துல் கபூர்.