இனவாதிகளை ஒடுக்க இராணுவத்தைப் பயன்படுத்துவேன்!'' ஜனாதிபதி எச்சரிக்கை!

எஸ். ஹமீத்-

மது நாட்டில் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இனவாத செயற்பாடுகள் தனது அரசாங்கத்திற்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த நிலைமை நீடித்தால் அதனை கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் கூறியுள்ளார். அரசாங்கத்திற்கும், சிறுபான்மை சமூகங்களுக்கும் நெருக்கடியை ஏற்படுத்த முனைவோர் இராணுவத்தினர் மூலம் அடக்கப்படுவர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக நன்கு திட்டமிட்ட வகையிலும் அரசாங்கத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்களின் வர்த்தக நிலையங்களின் மீது தொடர் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறான தாக்குதல்களைக் கட்டுபடுத்துவதற்கு பொலிஸாரால் முடியவில்லை என்றால் இராணுவத்தை களமிறக்கி நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவேன் என ஜனாதிபதி சூளுரைத்துள்ளார்.

முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் மீது தாக்குதல் மேற்கொள்வோரை கட்டுப்படுத்த பொலிஸாரினால் முடியவில்லை என்றால் இராணுவத்தினரை ஈடுபடுத்த எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஜனாதிபதியின் தலைமையில் நேற்று இடம்பெற்ற ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரிசாத் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

''பிரபாகரனைப் பிடித்த புலனாய்வுக் குழுவினரால் ஞானசார தேரரைப் பிடிக்க முடியாதா?'' என ஜனாதிபதியிடம் நேற்றைய தினம் அமைச்சர் ரிசாத் நேருக்கு நேர் காட்டமாகக் கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -