சொந்த செலவில் சூனியம் செய்த நிலையே கட்டார் மீதான தடை - ஓர் ஆய்வு

ற்போதைய கட்டார் நாட்டுக்கான தடையே அகிலம் முழுவதுமான பேசு பொருளாக இருக்கின்றது. இவ்வாறான தருணத்தில் பல தகவல்கள் நிமிடத்திற்கு நிமிடம் வெளியாகிய வண்ணமே உள்ளது. இருந்தும் 2009 ம் ஆண்டு மார்ச் 3ல் நான் கட்டாரில் முதல் காலடி பதித்து தற்போது வரை வியாபார சந்தைப்படுத்தல் சந்தையில் பணிபுரிந்த வகையில் ஒரு சிறு ஆய்வை நடாத்தியதன் சுருக்கமே இது. 

ஜூன் 6 ஆம் திகதி கட்டாருக்கான முதல் தடையை சவூதி அரசாங்கம் அறிவித்திருந்தது, அதனைத்தொடர்ந்து அமீரகம், பஹ்ரைன் எகிப்து போன்ற நாடுகளும் நொடிப்பொழுதில் தடையை அறிவித்தது. இது திடீர் அறிவிப்பாக இருந்தாலும் திட்டமிட்ட தடையே என்று அறிவதற்கு சில காரணங்கள் இருந்தது. அதில் முதலாவதாக சவூதி அரசாங்கம் அல்ஜஸீரா நிறுவனத்தை மே மாதம் முற்பகுதியிலேயே தடை செய்யப்பட்டதுவே, இதற்கான முதற்காரணம் அமீரக வெளிநாட்டு அமைச்சரின் மின்னஞ்சல்களை கட்டார் வெளியிட்ட காரணமாக கருத்தில் கொண்டு சில முறுகல்கள் தோன்றின. இதனை கட்டார் அரசாங்க செய்திச்சேவை நிராகரித்து. 

ஏனெனில் அந்தத்தருணம் கட்டார் செய்திச்சேவை ஹெக்கர்களினால் ஹெக் செய்யப்பட்டதன் விளைவே என்று கூறி உறுதிசெய்திருந்தது. அந்த வேளையில்தான் அனைத்தையும் பிரச்சினையாய் பார்க்கக் கூடிய அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் விஜயம் அமைந்திருந்தது மே 21ல் . சனிப்பிணம் தனிப்போகாது என்று எண்ணி எட்டாவது நாள் சனி .ஆரம்பித்தது வளைகுடாவில் போர் பனி. எது எவ்வாறு அமைந்ததோ அதன்படியே நடந்தேறுவதாக எண்ணி கட்டாரின் முன்னேற்றத்தை முடக்க பல காரணங்களைக்கூறி ஹமாஸ், ஈரான், கரளாவி இன்னும் பல்அனைத்து பாதைகளையும் மூடியது சவூதி அரசாங்கம் .சவூதி நினைத்தது கட்டாரின் நிலை மடுவில் விழுந்த யானையைப்போல் மன்றாடும் என நினைத்து ரமழான் என்றும் பாராமல் மூர்க்கத்தனமாய் தனது முல் நாடகத்தை அரங்கேற்றியது.

இதை கேள்வியுற்ற கட்டார்வாசிகள் விலைகளில் மாற்றம் எற்படும் என எண்ணி கட்டாரில் பெரும்பான்மை வாழும் இந்தியாவின் ஒரு பகுதி மக்கள் வியபார சந்தைகளினுள் புகுந்து தளபாடங்களை மாத்திரமே எஞ்சிய நிலையில் வைத்துவிட்டு அனைத்து பொருட்களையும் காலியாக்கிவிட்டனர். இதனைக்கண்ட இலங்கை ஊடகங்கள் கட்டாரின் நிலை கவலைக்கிடம் என செய்திகளை பறக்கவிட்டன. அதனைக்கேட்டு பெற்றோர்களும் உறவினர்களும் அழுது புலம்பி அழைப்பை ஏற்படுத்தி உண்மை நிலையை அறிந்து ஆறுதலடைந்தனர். இவையனைத்திக்கும் எதிர்மாறாக தனது ஆதரவை கட்டாருக்கே வழங்குவோம் என்று, குவைத், ஓமான் , துருக்கி, ஈரான் போன்ற நாடுகள் குதித்தன. அடுத்து 12 மணித்தியாலங்களுக்குள் பலசரக்குகள் வந்து குமிந்தன. விலையில் மாற்றங்களே இல்லாமல். சவூதியின் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப இன்றுடன் 6 வது நாளாக தடை தொடர்ந்தாலும் ,கட்டாரின் அன்றாட வாழ்க்கையிலோ அல்லது நிகழ்ச்சி நிரல்களிலோ எதுவித மாற்றங்களுமில்லை. 

தடைவிதித்த நாடுகள் இதனைப்பார்த்து பெருமூச்சு விட்டவண்ணம் வாயைப்பிளந்து பார்க்கின்றனர், காரணம் தடை விதிக்கப்படதன் விளைவாக அமீரகத்தில் இயங்கிய கப்பல் துறைமுகம் ஓமானுக்கு மாற்றப்படுவதோடு ஏனைய கப்பல்கள் கட்டாருக்கு நேரடியாக தளமிட சர்வதேச துறைமுகத்தை விரைவு படுத்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளது, வான்வழியை ஓமானூடாகவும் ஈரானூடாகவும் மாற்றப்பட்டுள்ளது. இதனால் 20-30 நிமிட பயண நேரம் அதிகரிப்பதையன்றி வேறு பிரதிகூலங்கள் இல்லை .சவூதி , மற்றும் அமீரகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் துருக்கி ஏனைய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் மறைமுகமாக பாதிக்கப்படப்போவது தடைவிதித்த நாடுகளேயன்றி கட்டாரில்லை என கட்டார்வாசிகளின் கருத்தாக அமைகின்றது .

அவையாவன;

  • சவூதியின் ஏற்றுமதியில் வீழ்ச்சி, 
  • அமீரகத்திலிருந்து கட்டாரினால் கொள்வனவு செய்யப்படும் கட்டிட பொருட்கள் 74% நிறுத்தப்படும். 
  • மாதம் 300 அமீரக புதிய நிறுவனங்கள் கட்டாரில் பதிவு செய்வது நிறுத்தப்படும்.
  • கட்டாரினால் வழங்கப்படும் அனல்மின் நிலைய பொருட்கள் நிறுத்தப்படும்,
  • 200000 மேலான எகிப்திய பணியாட்கள் திருப்பியனுப்படுவார்கள்.
  • இருந்தும் எகிப்தியர்கள் திருப்பியனுப்பட்டால் கட்டாரின் கட்டிட நிர்மானங்கள் தரமாக அமையும் என்பது கட்டாரில் வாழும் ஆசிய நாட்டு பணியாட்கள் அனைவரின் கருத்தாகவும் இருக்கின்றது. 

இவையனைத்தும் சொந்த செலவில் சூனியம் செய்த நிலையாக தடைவிதித்த நாடுகளுக்கு அமைந்திருப்பது நகைப்புக்குரிய விடயமாகவே இவையனைத்தும் நடைபெற்றால் கட்டாரின் வளர்ச்சியில் 25% பிரதிகூலங்கள் ஏற்படும் என்பதில் ஐயமில்லை. இருந்தும் இந்நிலைமையை முகம்கொடுத்தும் மக்களின் நலனுக்காக பாடுபடும் மன்னர் தமீம் தற்போது வளைகுடாவில் அதிகமானோரினால் விரும்ப்படுபவராக காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
கட்டாரில் இருந்து,
நெளபர் - பொத்துவில்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -