காங்கிரஸ் கட்சிக்கு எந்த ஒரு கொள்கையும் கிடையாது. நாடு விடுதலைப் பெற வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு வாகனம்தான் காங்கிரஸ். அதில் மவுலானா ஆசாத், பண்டிட் மதன் மோகன் மால்வியா போன்ற இடதுசாரி மற்றும் வலதுசாரி சிந்தனை கொண்டவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இடம்பெற்றிருந்தனர். சுதந்திரம் அடை வேண்டும் என்பதற்காக, பல்வேறு கொள்கைகள், சிந்தனை கொண்டவர்கள் தங்களை காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.
பனியா (வணிக) குடும்பத்தில் பிறந்த மகாத்மா காந்தி, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நன்கு அறிந்திருந்தார். அவர் ஒரு புத்திசாலி வணிகர். அதனால்தான், சுதந்திரம் கிடைத்தவுடன் காங்கிரஸ் கட்சியை உடனடியாக கலைத்துவிடும்படி கூறினார். அப்போது அவரால் அதை செய்ய முடியவில்லை. ஆனால், இப்போது சிலர் காங்கிரசை கலைக்கும் பணியை செய்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
அமித் ஷாவின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமித் ஷா அரசியலின் எல்லையை மீறிவிட்டார். சுதந்திர போராட்ட வீரர்களையும், அவர்களின் தியாகத்தையும் மகாத்மா காந்தியையும் அவமதித்துவிட்டார் என காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. அமித் ஷா மற்றும் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
அமித் ஷா தனது கருத்தை திரும்ப பெறுவதுடன், நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தினார்.