பொலிஸாரையும் அவர்களைப் போல ஜோக்கர்களாக ஆக்கிவிட்டனர்.

நான்கு பொலிஸ் குழுக்கள் அமைத்து தேடிப்பிடிக்க முடியாத நல்லாட்சி பொலிஸாரை காமெடி பொலிஸ் என்றேஅழைக்கவேண்டும் எனவும் பொலிஸாரையும் அவர்களை போன்று ஜோக்கர்களாக மாற்றிவிட்டதாக பாராளுமன்றஉறுப்பினர் டிவி சானக குறிப்பிட்டுள்ளார் .

நேற்று கூட்டு எதிர்கட்சி அமைப்பு நடத்திய ஊடக மாநாட்டில் முன்னாள் அமைச்சர் காமினி லொகுகே ஞானசாரதேரரை கைது செய்யமுடியாத பொலிஸ் மா அதிபர் பதவி விலக வேண்டும் என கூறியிருந்த நிலையில் இதுதொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் டிவி சானகவிடம் கேள்வி
எழுப்பப்பட்ட போது அவர் மேற்கண்டவாறுகுறிப்பிட்டார்.

சட்டம் அனைவருக்கும் சமமானதாகும்.

யுத்ததை முடித்த புலனாய்வு பிரிவு இருக்கும் இந்த நாட்டில் நான்கு பொலிஸ்குழுக்கள் அமைத்து

ஒருவரை பிடிக்க முடியாது என்பது வேடிக்கையான விடயம். இதே கதையை தொடர்ந்துபொலிஸார் கூறிவந்தால் பொலிஸாரை காமடி பொலிஸ் என்று மக்கள் அழைப்பார்கள்.

இந்த திருடன் பொலிஸ் விளையாட்டில் அரச உயர்மட்ட தலையீடு இருக்கலாம்.
இல்லாமல் இவ்வாறு நடக்கவாய்ப்பில்லை.

ஞானசார தேரர் விவகாரம் இந்த அளவு பேசுபொருளாக மாறியும் அவரை அரசு கைது செய்யவில்லை என்றால் அவர் இந்த அரசாங்கத்தில் எந்த அளவு பலம் பொருந்திய சக்தியாக இருக்க வேண்டும்

என டிவி சானக குறிப்பிட்டுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -