அரபுக் கல்லூரி அதிபர்களுக்கான கல்விச் சுற்றுலா...

பி. முஹாஜிரீன்-

பாலமுனை ஜம்மிய்யத்துஸ் ஸஹ்வா அல் கைரிய்யா (ஜெஸ்கா) நிறுவனத்தினால் அரபுக் கல்லூரி அதிபர்களுக்கான நாடளாவிய ரீதியிலான இலவச கல்விச் சுற்றுலா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஜெஸ்கா அமைப்பின் தலைவரும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் உப தலைவருமான அஷ்ஷெய்க் ஐ.எல்.எம். ஹாஸிம் சூரி மதனி தெரிவித்தார்.

எதிர்வரும் ஜூலை முதல் வாரத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அரபுக் கல்லூரி அதிபர்களுக்கான இக்கல்விச் சுற்றுலாவில் விசேட அதிதியாக கலாநிதி உமர் அல் ஈத் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அரபுக் கல்லூரிகளிலுள்ள முறைசார்ந்த, முறைசாராத அரபுக் கலாசாலைகளின் கல்வி அபிவிருத்தித் திட்டங்கள், மாணவர்களுக்காக வழங்கப்பட்டுள்ள விசேட வசதிகள், புறக்கீர்த்திய செயற்பாடுகள், பாடத்திட்ட உள்ளடக்கங்கள், அறபுக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் பொதுவான நடைமுறைகள் போன்ற பல விடயங்கள் தொடர்பாக இச்சுற்றுலாவில் கவனம் செலுத்தப்படுவதுடன் அறபுக் கல்லூரிகளுடன் தொடர்புடைய வேறு விடயங்கள் தொடர்பாக பரஸ்பரம் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது.

இதேவேளை அரபுக் கல்லூரி ஆசிரியர்கள், அறபுக் கல்லூரிகளில் பயிலும் கடைசி வகுப்பு மாணவர்கள் மற்றும் பள்ளிவாயல் இமாம்களுக்கான மூன்று நாள் வதிவிட பயிற்சிக் கருத்தரங்கு ஒன்றும் ஜம்மிய்யதுஸ் ஸஹ்வா அல் கைரிய்யாவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர் வரும் ஜூலை மாதம் 08ம் திகதி முதல் 10 வரையான காலப்பகுதியில் மட்டக்களப்பு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் நடைபெறவுள்ள இக்கருத்தரங்கில், சஊதி அரேபியாவில் இருந்து வருகை தரும் துறை சார்ந்த உலமாக்கள், மார்க்க அறிஞர்களால் விரிவுரைகள் நடத்தப்படவுள்ளன.

எனவே, கல்விச் சுற்றுலாவில் குறிப்பிட்ட தொகையினர் மட்டுமே இணைத்துக் கொள்ளப்படவுள்ளதால், இணைந்துகொள்ள விரும்பும் அறபுக் கல்லூரி அதிபர்கள் மற்றும் பயிற்சிக் கருத்தரங்கில் பங்குகொள்ள விரும்பும் அறபுக் கல்லூரிகளின் ஆசிரியர்களும் இறுதி வருட மாணவர்கள் ஆகியோர் அஷ்ஷெய்க் எம்.எச்.அத்னான் மதனி (0752730514, 0672255164), அஷ்ஷெய்க் ஏ.நஜாப் ஸஹ்வி (0774519515) ஆகியோருடன் தொடர்பு கொண்டு தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -