திருகோணமலையில் மூன்று சிறுமிகள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை வேண்டும் என்று அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் பொலிஸாரிடம் கோரியுள்ளனர்.
இந்த சிறுமிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் கட்டிட தொழிலாளிகள் சிலரால் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், குறித்த சிறுவர்கள் தொடர்பில் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள நீதிமன்ற விசாரணைகளின்போது சட்ட உதவிகளை தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.