காத்தான்குடி கடற்கரை வீதிக்கு புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும்




எம்.ரீ. ஹைதர் அலி-

காத்தான்குடி கடற்கரை வீதிக்கு புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள்

காத்தான்குடியிலுள்ள பிரதான வீதிகளுள் ஒன்றான காத்தான்குடி கடற்கரை வீதீயிலுள்ள பாதசாரி கடவைகளை புனரமைப்புச் செய்து புதிய வெள்ளை நிறத்திலான பாதசாரிகள் கடவைகளை இடும் நடவடிக்கைகள் 2017.06.06ஆந்திகதி மேற்கொள்ளப்பட்டது.

பிரதான பாடசாலைகள் பலவற்றை உள்ளடக்கியதாகவும் மிகவும் சன நெரிசல் மிகுந்த வீதிகளுள் ஒன்றாகவும் காணப்படும் இவ்வீதியில் தொடர்ச்சியாக அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்தும் முகமாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் அவர்கள் விடுத்த பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி அதிகாரசபையூடாக குறித்த புனரமைப்பு பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஏற்கனவே காத்தான்குடி கடற்கரை வீதியில் இடப்பட்டு அழிவடைந்த நிலையில் காணப்படும் மஞ்சள் நிற கடவைகளை உள்ளடக்கியதாக இனங்காணப்பட்ட பிரதானமான ஐந்து இடங்களில் இவ் வெள்ளை நிற பாதசாரிகள் கடவைகள் இடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு இன்னும் ஓரிரு நாள்களில் பூரனப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -