யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக செயற்பட்ட சஞ்சீவ தர்மரட்ண இடமாற்றலாகி பயிற்றுவித்தல் மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவு அதிகாரியாக சேவையின் நிமித்தம் கொழும்புக்கு இடமாற்றம் பெற்று சனிக்கிழமை (10) செல்லவுள்ளார்.
கடந்த வருடம் ஜீலை மாதம் முதல் தற்போது வரையான காலப்பகுதி வரை யாழ். மாவட்டத்தில் உள்ள 17 பொலிஸ் நிலையங்களின் மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சஞ்ஜீவ தர்மரட்ண கடமையாற்றியிருந்தார்.
மேலும் போக்குவரத்து பிரிவிற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ் மா அதிபர் கே.பி பிரணாந்து யாழ் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த இடமாற்றம் பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கு இணங்கியும் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடனும் பொலிஸ் திணைக்களத்தின் தேவைக்கு அமைவாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது தவிர வட பகுதிக்கு வெற்றிடமாக இருந்த சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதவிற்கு கே.ஈ.ஆர்.எல் பெர்ணான்டோ நியமிக்கப்பட்ட நிலையில் தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.இவர் ஏற்கனவே விசேட பாதுகாப்பு பிரிவின் அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
