ஒரு மதகுருவும் அவரோடுசேர்ந்த ஒருசில திருடர்கள் கூட்டமும் சேர்ந்து நாட்டில் அமைதியற்ற நிலையை ஏற்படுத்தி வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சருமான றிஷாத் பதியூதீன் தெரிவித்தார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட இப்தார் நிகழ்வு 2017-06-10 ஆம் திகதி அக்கட்சியின் பிரதித் தலைவரும் லக்சல நிறுவனத்தின் தலைவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தருமான கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில் தலைமையில் சம்மாந்துறை திறந்த வெளியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் றிஷாத் பதியூதீன் பல்லாயிரக்கணக்கான மக்கள் மத்தியில் தொடர்ந்து உரையாற்றுகையில்:
சம்மாந்துறையில் கைத்தொழில் பேட்டை ஒன்றை அமைப்பதற்காக ஒருமாதகாலத்துக்குள் 20 ஏக்கர் காணியை மஜ்லிஸ் சூறாவிடம் கோரியதாகவும் அவர்கள் நல்ல முடிவை தருவதாக கூறியுள்ளதாகவும், . தற்போது முஸ்லிம் உலகம் இரண்டாகப்பிரிந்துள்ளதை முஸ்லிம் உலகம் வேதனையுடன் நோக்குகின்ற இவ்வேளையில், இந்த நாட்டிலே நல்லாட்சியைக் கொண்டுவருவதற்காக இலங்கையில் உள்ள இரண்டாயிரம் பள்ளிகளின் மிம்பர்களும் அதேபோல உலமாக்கள், கற்றசமூகம் மற்றும் இளைஞர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் ஒன்றுபட்டு பாடுபட்டுஆட்சியை நிறுவியபோதிலும், இந்த ஆட்சியில் அண்மைக்கால சம்பவங்கள் எங்களை வேதனையடையச் செய்துள்ளன. இப்போது ஒவ்வொரு சாகர் நேரத்திலும் கலிமாச்சொன்ன ஒருவரது கடைகள் அல்லது சொத்துக்கள் எரியூட்டப்படுகின்ற செய்திகள்தான் அண்மைக்காலமாக வந்துகொண்டிருக்கின்றது என்றும்
ஒரு மதகுருவும் அவரோடுசேர்ந்த ஒருசில திருடர்கள் கூட்டமும் சேர்ந்து இந்த நாட்டிலே நின்மதியாக வாழ்ந்தது வந்த பெரும்பாமமை சமூதாயத்தையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு முஸ்லிம்களுடைய பொருளாதாரத்தை காவுகொள்வதற்காக, முஸ்லிம் சமூதாயத்தை அடிமைப்படுத்துவதற்காக, முஸ்லிம் சமூதாயத்துடைய நின்மதியைக் குழப்புவதற்காக செய்துவருகின்ற சதியை நீங்கள் அறிவீர்கள் என்றும் இந்த ஆட்சியாலர்களிடத்திலே ஒருகட்சியுடைய தலைவர் என்ற வகையிலும், ஐந்து பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கின்ற ஒருகட்சி என்ற அடிப்படையிலும், அதிகபட்ஷ ஆதரவைக்கொடுத்த சமூகம் சார்ந்த கட்சி என்ற அடிப்படியிலும், இந்த நாட்டின் ஜனாதிபதி,பிரதமர் மற்றும் பொலிசுக்கு பொறுப்பான அமைச்சர், பொலிஸ்மா அதிபர் போன்றவர்களை தனித்தனியாக சந்தித்தும் கூட்டாகச்சந்தித்தும் எங்களுடைய சமூதாயத்துக்கு ஏற்பட்டிருக்கின்ற இந்த நிலையையும் இப்போது நமது சமூகம் எதிர்பார்ப்பதையும் நாட்டில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுங்கள் என்ற விடயத்தை சொல்லவேண்டிய எல்லா வழியிலும் நாங்கள் சொல்லியிருக்கின்றோம் என்றும் இந்த சமூகக்கடமையை அல்லாஹ்வுக்கு மட்டும் பயந்தவர்களாக நாங்கள் செய்து இருக்கின்றோம் செய்து வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.
இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை சுமந்துள்ள பொலிசார் இன்று காவலர்களாக இருந்துகொண்டு தனதுகடமையைச் சரியாக செய்யாததனால் இங்கு எங்களுடைய சொத்துக்கள் அழிந்துகொண்டிருக்கின்றது. எனவே நாட்டின் சட்டதிட்டங்களை பேணி எங்களுடைய பொருளாதாரத்தை பாதுகாப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு இலங்கையில் வாழும் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் சார்பாக சம்மந்தப்பட்டவர்களிடம் வேண்டுகோல் விடுப்பதாகவும் தெரிவித்தார்.
சகோதரர்களே! நமது சகோதரர்களின் பாதுகாப்புக்கு இப்புனித ரமழானில் அல்லாஹ்விடம் அதிகம் அதிகமாக துஆக்களை கேட்கவேண்டியுமுள்ளது என்றும் கேட்டுக்கொண்டார்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்ட இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதி அமைச்சருமான எம்.எஸ்.எஸ்.அமீர் அலி,கட்சியின் பிரதித் தலைவரும் அரச வர்த்தக கூட்டுத்தாபானத்தின் தலைவருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல், கட்சியின் செயலாளர் மற்றும் உயர்பீட உறுப்பினர்கள் கல்வியாளர்கள் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இப்தார் நிகழ்வின்போது அஷ்செய்க் ஏ.பௌஸி (தப்லீகி) அவர்கள் மார்க்க சொற்பொழிவாற்றியது குறிப்பிடத்தக்கது.