நானுஓயா விபத்து - சிறுமி பலி - நகரில் கலவரம்..




க.கிஷாந்தன்-

நானுஓயா பிரதேசத்தில் 15.06.2017 அன்று காலை 7 மணியளவில் ஏற்பட்ட வாகன விபத்தில் உயிரிழந்த சிறுமியின் சடலம் பொலிஸ் மற்றும் விசேட அதிரடி படையினரின் பாதுகாப்புடன் மதியம் 2.45 மணியளவில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில், நானுஓயா நகரின் பாதசாரி கடவையில், பாதை கடக்க முற்பட்ட 6 வயது சிறுமி மீது, கனரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே பரிதாபமான நிலையில் இச்சிறுமி உயிரிழந்துள்ளார்.

இதனால் இப்பிரதேசத்தில் பதற்றநிலை காணப்பட்டுள்ளதோடு, பொது போக்குவரத்து சேவையும் 7 மணித்தியாலயம் முற்றாக ஸ்தம்பிதமடைந்தன. இதனால் பயணிகளும் பெரும் சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர்.

உயிரிழந்த சிறுமி தனது வீட்டிலிருந்து பாடசாலை செல்வதற்காக நானுஓயாவில் உள்ள ஜேம்ஸ் பீரிஸ் சிங்கள வித்தியாலயத்திற்கு செல்வதற்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற போதே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரதல்ல கீழ்பிரிவு பகுதியை சேர்ந்த தேவ்மிணி ஆக்காஷா என்ற 6 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

சிறுமி உயிரிழப்புடன் சம்பவ இடத்தில் கலவரம் ஏற்பட்டதனால் பதற்ற நிலை நிலவி வந்தது. எனினும் இதனை கட்டுப்பட்டுத்துவதற்கு விசேட அதிரடி படையினர், பொலிஸார், இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு சுமார் 7 மணித்தியாலயங்களின் பின் நிலவரம் வழமைக்கு திரும்பியது.

குறித்த வாகனத்தின் சாரதியை கைது செய்து நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலைய உத்தியோகஸ்தர்கள் சிலரையும் இடமாற்றம் செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றதாக பொலிஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சடலம் பிரேத பரிசோதனைகளின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

அத்தோடு செய்தி சேகரிப்பில் ஈடுப்பட்டிருந்த ஊடகவியலாளர் ஒருவரின் கெமராவும், பாவனையில் வைத்திருந்த பொதுமக்களின் 50ற்கும் மேற்பட்ட கையடக்க தொலைபேசிகளும் ஆத்திரமுற்ற பொதுமக்களால் பறித்து உடைத்துமையும் குறிப்பிடதக்கது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -