புல்மோட்டை பிரதேசத்தில் யானையின் அட்டகாசம் சம்பவ இடத்திற்க்கு- அன்வர் விஜயம்




புல்மோட்டை ஜின்னாபுரம் மற்றும் வீரன்தீவு போன்ற பகுதிகளிலுள்ள வீடுகள் சிலதை காட்டு யானை கடந்த நான்கு நாட்களாக சேதமாகியுள்ளது குறித்த யானை பதவி சிரபுர பகுதியில் கடும் அட்டகாசம் புரிந்த நிலையில் அங்கு கிராமத்தை சுற்றி யானை வேலிகள் போடப்பட்டதும் அவை புல்மோட்டை பிரதேசத்தி நோக்கி வந்ததாக வன ஜீவிகள் திணைக்களத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இது விடயமாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வர் சம்பவ இடத்திற்க்கு 29 (வியாழன் ) விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டு அரசாங்க அதிபர் பிரதேச செயலாளர் மற்றும் வன ஜீவிகள் திணைக்களத்தின் உதவி பணிப்பாளரோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு குறித்த பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டா ஈடு வழங்குவதாக பிரதேச செயலாளர் மற்றும் அரசாங்க அதிபரால் தகவலை உடனடியாக கிராம சேவகரூடாக அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

மேலும் குறித்த காட்டு யானையை வேறு பிரதேச சரணாலயத்திற்கு கொண்டு செல்வதற்கு கொழும்பில் இருந்து இரண்டு நாளைக்குள் வரவழைப்பதாகவும் குறிப்பிட்ட வன ஜீவராசி அதிகாரி எதிர்வரும் ஜூன் 13 ம் திகதி நடை பெறவுள்ள பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் புல்மோடடை பிரதேசத்தில் யானை வேலி அமைக்கும் நடவடிக்கைக்கு அறிக்கையை சமர்பிக்கும்படி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரை கேட்டுக்குக்கொண்டார் அரசாங்க அதிபர் ஜனாதிபதியின் விசேட திட்டத்தின்கீழ் வேலி அமைக்கும்பணியை அவசரமாக மேற்கொள்வதாக மாகாண சபை உறுப்பினர் அன்வரிடம் தெரிவித்தார் .

குறித்த பகுதியை பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க பிரதேச செயலாளரால் கிராம சேவகர் உட்பட அலுவலகர்கள் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் அதிகாரிகளை உடன் இன்று அனுப்பி வைப்பதாக அரசாங்க அதிபர் மாகாண சபை உறுப்பினர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -